பாதிக்கப்பட்ட கடைகளுக்கு மசெக நகர மன்றங்கள் வழங்கும் கட்டண விலக்கு

2 mins read
2b87f690-bc65-4076-9fd7-5122b2ca4734
-

மக்­கள் செயல் கட்­சி­யின் நகர மன்­றங்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­படும் எட்டு ஈரச் சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 குழு­மங்­கள் என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள வட்­டா­ரங்­களில் உள்ள இந்­தக் கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

வர்த்­த­கம் செய்ய முடி­யாத கால­கட்­டத்­தில் கடைக்­கா­ரர்­களுக்கு உத­வும் வகை­யில் நிதி உதவி வழங்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பாடுகள் கார­ண­மாக கடை­கள் மூடப்­படும் கால­கட்­டத்­தின் சேவை, பரா­ம­ரிப்பு கட்­ட­ணம், தற்­கா­லிக தொழில் உரி­மக் கட்­ட­ணம் ஆகி­ய­வற்­றைப் பாதிக்­கப்­பட்ட கடைக்­கா­ரர்­கள் செலுத்த வேண்­டி­ய­தில்லை என்று மசெ­க­வின் 15 நகர மன்­றங்­க­ளின் ஒருங்­கி­ணைப்­புத் தலை­வ­ரான திரு லிம் பியாவ் சுவான் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிருமி பர­வு­வ­தைத் தடுக்­க­வும் இடத்­தைச் சுத்­தம் செய்ய வகை செய்­ய­வும் பாதிக்­கப்­பட்ட சந்­தை­களும் உண­வங்­காடி நிலை­யங்­களும் இரண்டு வாரங்­

க­ளுக்கு மூடப்­படும்.

பாதிக்­கப்­பட்ட 1,076 கடைக்­கா­ரர்­க­ளுக்கு மொத்­தம் $70,000 பெறு­மா­ன­முள்ள கட்­ட­டண விலக்கு வழங்­கப்­படும் என்று மவுண்ட்­பேட்­டன் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு லிம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

"பாதிக்­கப்­பட்ட கடைக்­கா­ரர்­

க­ளுக்கு அர­சாங்­கம் வழங்­கும் ஆத­ர­வு­டன் இந்­தக் கட்­டண விலக்­கும் அளிக்­கப்­ப­டு­கிறது.

"கடை­களை மூட வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தால் அதன் கார­ண­மாக ஏற்­படும் சவால்­களை சமா­ளிக்க இந்த நிதி உதவி அவர்­

க­ளுக்கு உத­வும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று திரு விம் கூறி­னார்.

பூன் லே பிளேஸ் ஃபுட் விலேஜ், புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், சோங் பூன் சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், சொங் பாங் சந்தை, கிள­மெண்டி 448 சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், ஹேக் ரோடு சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், ஹோங் லிம் சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், வாம்போ டிரைவ் சந்தை ஆகி­ய­வற்­றின் கடைக்­கா­ரர்­க­ளுக்­குக் கட்­டண விலக்கு வழங்­கப்­படும்.

இந்த இடங்­களை அங் மோ கியோ நகர மன்­றம், ஜாலான் புசார் நகர மன்­றம், ஜூரோங்-கிள­மெண்டி நகர மன்­றம், மரின் பரேட் நகர மன்­றம், நீ சூன் நகர மன்­றம், தஞ்­சோங் பகார் நகர மன்­றம், வெஸ்ட் கோஸ்ட் நகர மன்­றம் ஆகிய ஏழு நகர மன்­றங்­களும் நிர்­வ­கிக்­கின்­றன. இவ்­வி­டங்­களை மீண்­டும் திறப்­ப­தற்கு முன்பு துப்­பு­ர­வுப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

"பாதிக்­கப்­பட்ட கடைக்­கா­ரர்­களில் பலர் எங்­கள் வட்­டா­ரத்­தின் குடி­யி­ருப்­பா­ளர்­கள்.

"கடை­களை மூட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ள­தால் அவர்­

க­ளின் வாழ்­வா­தா­ரம் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் நமது சமூ­கத்­துக்கு சேவை­யாற்றி வரு­ப­வர்­கள். வர்த்­த­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அவர்­கள் படும் வேதனை எங்­க­ளுக்கு நன்கு புரி­கிறது," என்­றார் திரு லிம்.