கல்லீரல் புற்றுநோய்: ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் முறையை சாத்தியமாக்க நடத்தப்படும் ஆய்வு

2 mins read
aac10b6d-9807-458b-9e38-adf2d32903e0
Cancer patient Tina Koh (left) and her oncologist Dr Choo Su Lin. PHOTO: ALPHONSUS CHERN -

சிங்­கப்­பூ­ரில் மிக மோச­மான உயிர்க்­கொல்லி நோய்­களில் கல்­லீ­ரல் புற்­று­நோ­யும் ஒன்று என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, ஆரம்­ப­க்கட்­டத்­தி­லேயே கல்­லீ­ரல் புற்­று­நோய் இருப்­ப­தைக் கண்­டு­பி­டிப்­பது தேவை என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதை­யொட்டி தேசிய அள­வி­லான ஆய்வு ஒன்று அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கல்­லீ­ரல் புற்­று­நோய் சிங்­கப்­பூர் ஆட­வர்­க­ளி­டையே மூன்­றா­வது ஆக மோச­மான உயிர்க்­கொல்லி நோயா­கத் உள்ளது. சிங்­கப்­பூர் பெண்­க­ளி­டையே அது நான்­கா­வது ஆக மோச­மான உயிர்க்­கொல்லி நோயாக உள்­ளது.

ஆனால் கல்­லீ­ரல் புற்­று­நோ­யால் பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது பெரும்­பா­லா­னோ­ருக்கு ஆரம்­பக்­கட்­டத்­தில் தெரி­வ­தில்லை.

20 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே ஆரம்­பத்­தி­லேயே தெரி­ய­

வ­ரு­கிறது. அந்த நோய் இருப்­பது ஆரம்­பத்­தி­லேயே தெரி­ய­வந்­தால் குணம் அடை­யும் சாத்­தி­யம் இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

கல்­லீ­ரல் புற்­று­நோய் இருப்­பதை ஆரம்­பத்­தி­லேயே கண்­டு­பி­டிப்­பது தொடர்­பான ஆய்­வுக்கு சிங்­கப்­பூர் தேசிய புற்­று­நோய் மையம் தலைமை­ தாங்­கு­கிறது. துல்­லி­ய­மான ஆரம்­ப­கட்ட நோய் கண்­ட­றி­தல் முறையே அதன் இலக்கு.

கல்­லீ­ரல் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யம் ஒரு­வ­ருக்கு இருப்­ப­தைக் கண்­டு­பி­டிக்­க­வும் நோய் ஏற்­ப­டா­மல் இருக்­க­வும் செயற்கை நுண்­ண­றிவு முறை ஒன்று மேம்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக கல்­லீ­ரல் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட பல நோயா­ளி­க­ளுக்கு நான் சிகிச்சை அளித்­தி­ருக்­கி­றேன். அந்த நோயை ஆரம்­ப­கட்­டத்­தில் கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய சிகிச்சை முறை அவ­சி­யம்.

"அத்­த­கைய சிகிச்சை முறை இருந்­தால் மேலும் தர­மான சிகிச்சை வழங்கி உயி­ரைக் காப்­பாற்­ற­லாம்," என்று புற்­று­நோய் சிகிச்சை நிபு­ண­ரும் பிர­தான ஆய்­வா­ள­ரு­மான பேரா­சி­ரி­யர் பியர்ஸ் சாவ் தெரி­வித்­தார்.

கல்­லீ­ரல் சிரோ­சிஸ், ஹெப்­ப­டை­டிஸ் பி, ஹெப்­ப­டைடிஸ் சி, மது­பா­னம் அருந்­தா­த­போ­தி­லும் கல்­லீ­ர­லில் சேரும் அதி­க­ளவு கொழுப்பு, அள­வுக்கு அதி­க­மாக மது­பா­னம் அருந்­து­தல் ஆகி­யற்­றால் சிங்­கப்­பூ­ரில் கல்­லீ­ரல் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யம் அதி­கம் உள்­ளது என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

மது­பா­னம் அருந்­தா­த­போ­தி­லும் கல்­லீ­ர­லில் அதிக அள­வி­ல் கொழுப்பு சேரு­வது பெரும்­பா­லும் மேற்­கத்­திய உண­வு­வ­கை­க­ளால் ஏற்­ப­டு­கிறது என்று நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சர்க்­கரை அளவு அதி­க­முள்ள குளிர்­பா­னங்­களை அருந்­து­தல் குக்­கீஸ் போன்ற 'புருக்­டோஸ்' அதி­கம் உள்ள உண­வுப் பொருட்­க­ளைச் சாப்­பி­டு­வ­தால் கல்­லீ­ர­லில் அதிக அளவு கொழுப்பு சேரு­வ­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் தேசிய புற்­று­நோய் மையத்­தின் தலை­மை­யின்­கீழ் இந்த ஆய்வு நான்கு ஆண்­டு­க­ளுக்கு நடத்­தப்­படும்.

ஆய்­வில் பங்­கெ­டுப்­போர் ஒவ்­வொரு ஆறு மாத­மும் மருத்­துவப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். மொத்­தம் ஏழு முறை அவர்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­படும்.

இந்­தக் கண்­கா­ணிப்­புக் கால­கட்­டத்­தில் அவர்­க­ளுக்கு கல்­லீ­ரல் புற்­று­நோய் ஏற்­பட்­டால் அவர்­க­ளுக்­குத் தேவை­யான சிகிச்சை அளிக்­கப்­படும்.

அவர்­கள் தொடர்ந்து ஆய்­வில் பங்­கெ­டுக்­க­லாம்.

இந்த ஆய்­வில் பங்­கெ­டுப்­ப­தற்­கா­கக் கடந்த ஏப்­ரல் மாதத்­தி­

லி­ருந்து 200க்கும் மேற்­பட்­டோர் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

2022ஆம் ஆண்­டுக்­குள் 2,000 பேரைச் சேர்க்க ஆய்வு இலக்கு கொண்­டுள்­ளது.