நாடாளுமன்ற உறுப்பினரின் 'கனீர்' காலை அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரின் 'கனீர்' காலை அழைப்பு

2 mins read
ce703c28-9944-4b01-abf1-525eadda43ec
சுய பரிசோதனை சாதனத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஒலிபெருக்கி பயன்படுத்தி குடியிருப்பாளர் களுக்குக் கூறும் திரு லியாங் எங் ஹுவா.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்­கிட் பாஞ்­சாங் குடி­யி­ருப்­பா­ளர்­களை நேற்று காலை கனீர் என்ற குரல் தூக்­கத்­தி­லி­ருந்து தட்டி எழுப்­பி­யது.

கொவிட்-19 சுய பரி­சோ­தனை சாத­னங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி அத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா ஒலி­பெ­ருக்கி மூலம்

கேட்­டுக்­கொண்­டார்.

"ஞாயிற்­றுக்­கி­ழமை காலை­யில் உங்­கள் அனை­வ­ருக்­கும் தொந்­

த­ரவு கொடுப்­ப­தற்கு என்னை மன்­னிக்­க­வும். கொவிட்-19 சுய பரி­சோ­தனை சாத­னங்­கள் அனை­வ­ருக்­கும் விநி­யோ­கிக்­கப்­படும் என்று தெரி­விக்க விரும்­பு­ கி­றேன்," என்று காலை 10.50 மணி அள­வில் திரு லியாங் அறி­வித்­தார்.

தங்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேசு­வ­தைக் கேட்க குடி­

யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் சன்­னல் அரு­கில் கூடி­னர்.

திரு லியாங் தமது அறி­விப்பை முடித்­த­தும் நன்றி தெரி­விக்­கும் வகை­யில் அனை­வ­ரும் கர­வொலி எழுப்­பி­னர்.

அடுத்த பத்து நிமி­டங்­

க­ளுக்குள் கொவிட்-19 சுய பரி­சோ­தனை சாத­னத்­தைப் பெற்­றுக்­கொள்ள புளோக் 443 ஃபஜார் சாலை­யில் அமைக்­கப்­பட்ட கூடத்­துக்­குக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

446 ஃபஜார் சாலை­யில் உள்ள ஃபஜார் சந்தை, 497 ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட் 41ல் உள்ள சந்தை ஆகி­ய­வற்­றுக்கு அரு­கில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு சுய பரி­சோ­தனை சாத­னங்­களை விநி­யோ­கிக்க மக்­கள் கழ­கத்­து­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் இரவு தெரி­வித்­தது.

விநி­யோ­கம் செய்­வ­தற்­காக 30,000க்கும் அதி­க­மான சுய பரி­சோ­தனை சாத­னங்­கள் தயார்நிலையில் உள்ளதாக திரு லியாங் கூறி­னார்.

சுய பரி­சோ­தனை சாத­னங்­களை விநி­யோ­கிக்­கும் பணி­யில் தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். காலை 10 மணி நில­வ­ரப்­படி 30லிருந்து 40 குடி­யி­ருப்­பா­ளர்­கள் மட்­டுமே சாத­னங்­க­ளைப் பெற்றுக்­ கொள்ள வந்­த­தால் அனை­வ­ருக்­கும் தெரி­விக்­கும் வகை­யில் ஒலி­பெ­ருக்கி மூலம் அறி­வித்­த­தாக திரு லியாங் கூறி­னார்.