நண்பனின் இறப்பும் இழப்பும்: துயரிலிருந்து மீளும் பயணம்

நண்பனின் இறப்பும் இழப்பும்: துயரிலிருந்து மீளும் பயணம்

3 mins read
3474b89d-e654-4544-b7ad-485add1c4ae4
ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் வெளியே மாணவர்கள் மலர்க்கொத்து வைத்து இறந்த மாணவருக்காக அஞ்சலி செலுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பல­ரின் மன­தை­யும் பாதித்த இரு சம்­ப­வங்­கள் கடந்த மாதம் நடந்­தன. ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் ஒரு­வர் கோட­ரி­யால் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­தார். மற்­றொரு சம்­ப­வத்­தில் கூடைப்­பந்து விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த இளை­ஞர் மீது வலைக்­கம்­பம் விழுந்து, பின்­னர் அந்த வாலி­ப­ரும் உயி­ரி­ழந்­தார்.

எதிர்­பா­ரா­மல் நடந்­தவை. நண்­பன் தாக்­கப்­பட்டு இறந்­து­வி­டு­வான் என்று அந்த ரிவர் வேலி மாண­வ­ரின் நண்­பர்­கள் கன­வி­லும் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்­கள். வலைக்­கம்­பம் விழப்­போ­கிறது என்று உடன் கூடைப்­பந்து விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த அந்த நண்­ப­னும் நினைத்­தி­ருக்­க­மாட்­டான். ஆனால் மர­ணம் நேர்ந்­தது. சிறு வய­தி­னர் இறப்­பது என்­பது சாதா­ர­ண­மாக நிகழ்­வ­தில்லை. அவ்­வாறு நடப்­பது இயற்­கைக்கு மாறா­னது, நியா­ய­மும் இல்லை. ஆனால், துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக இளம்­வ­ய­தி­ன­ரும் இறந்து போகின்­ற­னர். அத்­த­கைய இறப்­பால் ஏற்­படும் இழப்பு அதி­கம்.

சில சம­யங்­களில் இளை­யர்­க­ளுக்­குத் தங்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரைக் காட்­டி­லும் நண்­பர்­க­ளின் அன்பு முக்­கி­ய­மா­கத் தோன்­று­வ­துண்டு. அத­னால், ஆரு­யிர்த் தோழன் திடீ­ரென்று ஒரு­நாள் இல்­லா­மல் போகும்­போது அந்த இள­ம­ன­தில் உண்­டா­கும் வலி பன்­ம­டங்­கா­க­லாம். இந்­தத் துய­ரத்­தைப் பெற்­றோர், ஆசி­ரி­யர் அல்­லது வேறு எவ­ரா­லும் புரிந்­து­கொள்ள முடி­யாது. மக­னின் நண்­பன் இறந்­து­விட்­டதை அறிந்­து­கொள்­ளும் ஒரு தாயார், அந்த நண்­ப­னைப் பற்றி அதி­கம் அறிந்­தி­ருக்­க­மாட்­டார். அத­னால் தம் மக­னுக்கு ஏற்­பட்ட பாதிப்­பை­யும் முழு­மை­யாக உண­ர­மாட்­டார்.

ஒரு­வ­ரின் இறப்பை ஏற்­றுக்­கொண்டு உல­கம் மட்­டும் நக­ருமே தவிர, நண்­பனை இழந்­த­வன் அதி­லி­ருந்து மீண்­டு­வ­ரத் தவிப்­பான்.

இனி யாரு­டன் நான் விளை­யா­டு­வேன், என் நண்­ப­னுக்கு இப்­படி நடந்­து­விட்­டதே என்­பதை என்­னால் நம்ப முடி­ய­வில்லை, இன்று காலை­தான் அவன் எனக்கு 'வாட்ஸ்­அப்' அனுப்­பி­னான் என்று பல எண்­ணங்­கள் அவ­னுக்­குள் ஓடிக்­கொண்டே இருக்­கும். கடந்த காலத்­திற்­குச் சென்று அந்த இறப்பு நேரா­மல் தடுக்க முடி­யாதா என்­று ­கூட மனம் நொந்­து­கொள்­ளும்.

கண்­ணீர் விடுங்­கள்

நோய் கார­ணத்­தால் எதிர்­பார்த்த மர­ண­மாக இருந்­தாலோ திடீ­ரென்று நேர்ந்த மர­ண­மாக இருந்­தாலோ, முத­லில் இறந்த நண்­ப­னுக்­காக அழு­வ­தில் தவ­றே­தும் இல்லை என்­பதை உணர வேண்­டும். அழுகை என்­பது பல­வீ­னத்­தின் அடை­யா­ள­மல்ல. அது மீண்­டு­வ­ரு­வ­தன் முதல் படி­யா­க­வும் இருக்­க­லாம்.

நினை­வுக் கூட்­டத்­திற்கு

செல்­லுங்­கள்

நண்­ப­னின் நினை­வாக நடக்­கும் பிரார்த்­த­னை­க­ளுக்­குச் செல்­ல­வும். அந்த நண்­பனை இழந்­து­விட்ட வேறு நபர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசும்­போது ஆறு­த­லாக இருக்­கும். அத்­து­டன் நண்­ப­னி­ட­மி­ருந்து முறை­யாக விடை­பெற்­றுக்­கொள்­ளும் வாய்ப்­பாக அது அமை­ய­லாம். நண்­பன் இனி இல்லை என்­பதை மன­மும் உண­ரத் தொடங்­கும்.

பொழு­து­போக்­கில் ஈடு­ப­டுங்­கள்

சிலர் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான பொழு­து­போக்­கில் மூழ்­கி­வி­டு­வர். குத்­துச்­சண்டை போன்ற உடற்

பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வது, இயற்கை பூங்­கா­வில் நடந்து செல்­வது, உரத்த இசைக்கு ஆடிப்­பா­டு­வது, நகைச்­சு­வைத் திரைப்­ப­டங்­க­ளைப் பார்ப்­பது போன்­ற­வற்­றில் நேரத்­தைச் செல­வி­டும்­போது இழந்­ததை மெல்ல மறக்­க­லாம். செல்­லப்­பி­ரா­ணி­யின் பாச­மும் இத­ம­ளிக்­கும்.

பிடித்­த­மான பெரி­ய­வர் ஒரு­வ­ரி­டம்

மனந்­தி­றந்து பேசுங்­கள்

உங்­கள் நிலை­யைப் பெரி­ய­வர்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­யாது என்று எண்­ணி­விட வேண்­டாம். சில சம­யம் குடும்­பத்­தில் உங்­க­ளுக்­குப் பிடித்­த­மான ஓர் உற­வி­னர் இருப்­பார் அல்­லது உங்­க­ளின் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­ய­ரு­டன் இன்­ன­மும் தொடர்­பில் இருக்­க­லாம். அவர்­க­ளி­டம் பேசுங்­கள்.

புது அடை­யா­ளம் ஒன்றை

ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள்

நண்­பன் இல்­லாத வாழ்க்­கையை ஏற்­றுக்­கொண்டு உங்­க­ளுக்­கென ஒரு புதிய அடை­யா­ளத்தை உரு­வாக்­கிக்­கொள்­ளுங்­கள். நீங்­கள் இறந்து போயி­ருந்­தால் உங்­கள் நண்­பன் அவன் வாழ்க்­கையை நல்ல முறை­யில் தொட­ர­வேண்­டும் என்று நீங்­கள் எப்­படி விருப்­பப்

படு­வீர்­களோ, அதே­போல் உங்­க­ளின் நல்­வாழ்வை, இறந்த உங்­கள் நண்­ப­ரும் விரும்­பு­வார் என்­பதை உணர்ந்து வாழுங்­கள்.

நினை­வ­கம் தொடங்­குங்­கள்

நண்­ப­னுக்கு ஃபேஸ்புக் பக்­கம் இருந்­தால், அங்கு உங்­க­ளின் எண்­ணங்­க­ளைப் பதி­வி­டுங்­கள். நண்­பன் ஞாப­க­மாக ஒரு வலைப்­ப­தி­வைத் தொடங்­குங்­கள். புகைப்

படங்­கள், நினை­வில் நின்ற சம்­ப­வங்­கள், காணொ­ளி­கள் போன்­ற­வற்­றைப் பகிர்ந்­து­கொள்­ளும்­போது நண்­ப­னின் நினை­வாக ஒரு நிரந்­த­ரத் தளம் இணை­யத்­தில் இருக்­கும்.

உதவி நாட முன்­வா­ருங்­கள்

மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்­துப் பள்­ளி­களில் உங்­க­ளின் ஆசி­ரி­யர்­களும் பள்ளி ஆலோ­ச­கர்­களும் பேசி வரு­கின்­ற­னர். அந்­தத் தக­வல்­களை உள்­வாங்­கிக்­கொள்­வது பய­னுள்­ள­தாக இருக்­கும். இளை­யர்­க­ளுக்கு மன­நல ஆலோ­ச­னை­யும் ஆத­ர­வும் வழங்­கும் தளங்­களும் உண்டு.

CARE Singapore 6978 2728

TOUCHline 1800 377 2252

Fei Yue Community Services

ec2.sg

நண்­பன் ஏன் இறந்­தான் என்­னும் கேள்­விக்­குப் பதில் கிடைக்­கவே கிடைக்­காது என்­பதை உணர்­வது முக்­கி­யம். இழப்­பின் துய­ரத்­தி­லி­ருந்து மீண்­டு­வ­ரும் பய­ணம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் மாறு­படும். அதை ஏற்­றுக்­கொண்டு உங்­க­ளி­டத்­தில் நீங்­களே பொறுமை, கருணை இரண்­டை­யும் காட்ட மறந்­து­வி­டா­தீர்­கள்.