'சமூக ஊடகத்தில் படங்களைப் பதிவிடும்போது கவனம் தேவை'

'சமூக ஊடகத்தில் படங்களைப் பதிவிடும்போது கவனம் தேவை'

2 mins read
2d22f6c8-52ab-4299-ad9e-c0225b64b19e
உதவி தேவைப்படுவோர் குறித்த விவரங்களை 'காம்கேர்' நேரடித் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்குமாறு சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பொது மக்களை ஊக்குவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோர்க்­கும் உதவி தேவைப்­ப­டு­வோர்க்­கும் உதவ முய­லும்­போது, அவர்­க­ளின் அவ­ல­நிலை குறித்த படங்­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் சமூக ஊட­கங்­களில் பதி­வி­டும்­போது எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்­டுத் துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங் வலி­யு­றுத்தி உள்ளார்.

அத்­த­கை­யோரைச் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் சமூக சேவை அலு­வ­ல­கங்­களில் உள்ள அதி­காரி ஒரு­வ­ரி­டம் அறி­மு­கம் செய்­து­வைப்­பதே அவர்­களுக்கு உதவ மிகப் பொருத்­த­மான, செயல்­தி­றன்­மிக்க வழி என்­றும் அதன்­மூ­லம் அவர்­க­ளுக்கு நிபு­ணத்­துவ உதவி வழங்க முடி­யும் என்­றும் திரு­வாட்டி சுன் கூறி­ இருக்­கி­றார்.

காகித அட்­டைச் சேக­ரிப்­பா­ளர்­கள், யாசகர்கள், கண்ட இடங்­களில் உறங்­கு­வோர் போன்­றோர்க்­கான உத­வித் திட்­டங்­கள் குறித்து ஜாலான் புசார் குழுத்­தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா வினா எழுப்­பி­னார்.

அத்­து­டன், உதவி தேவைப்­ப­டு­வோர் குறித்த படங்­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் சமூக ஊட­கங்­களில் பதி­வி­டும் வழக்­கத்தை ஊக்­கு­விக்­கா­தி­ருக்க தீவிர விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் ஆலோ­சனை கூறி­னார்.

கடந்த மே மாதம், முதுமை மறதி நோயால் பாதிக்­கப்­பட்ட மூதாட்டி ஒரு­வ­ரி­டம் போலி­சார் மோச­மாக நடந்­து­கொண்­ட­தா­கக் கூறி, 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' இணை­யத்­தளம் காணொ­ளி­க­ளு­டன் கூடிய ஒரு பதிவை வெளி­யிட்டு இருந்­தது. அத­னைத் தொடர்ந்து, 'அதில் உண்­மை­யில்லை' என்று அதி­காரி­களும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­க­மும் மறுப்பு தெரி­வித்­த­னர்.

பின்னர், தம் தாயார் தொடர்­பான காணொளி நேர்­கா­ண­லுக்கு மன்­னிப்பு கோரும்­படி அம்­மூ­தாட்­டி­யின் மகன் சென்ற மாதம் விடுத்த கோரிக்­கை­யை­யும் அந்த இணை­யத்­த­ளம் நிரா­க­ரித்­தது.

திரு­வாட்டி புவா­வின் கருத்­துடன் உடன்­பட்ட திரு­வாட்டி சுன், "எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள ஒரு­வர் குறித்த காணொ­ளியை அல்­லது படத்­தைப் பதி­வி­டு­வது, அவ­ரது தனிப்­பட்ட உரி­மை­யை­யும் ரக­சி­யத்­தன்­மை­யை­யும் மீறுவதாக இருக்கலாம் என்­ப­து­டன் அவர்­மீது தேவை­யில்­லாத கவ­னத்­திற்­கும் வித்­தி­டக்­கூ­டும்," என்­றார்.

அது அவ­ருக்­குச் சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாமல் போய்­வி­ட­லாம் என்று திரு­வாட்டி சுன் குறிப்பிட்டார்.

அத்­து­டன், அவ­ரது அந்த அவ­ல­நி­லைக்­குக் குடும்ப உற­வு­நி­லையே கார­ண­மாக இருக்­கும்­ பட்­சத்­தில், அத்­த­கைய படங்­களும் காணொளி­களும் அவ­ரது குடும்ப உற­வு­முறை­களை மேலும் மோச­மாக்­கி­வி­டக்­கூ­டும் என்­றும் திரு­வாட்டி சுன் கூறி­னார்.

துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பொதுமக்களுக்கு வலியுறுத்து