'எந்த சிறாருக்கும் தீவிர தொற்றில்லை'

'எந்த சிறாருக்கும் தீவிர தொற்றில்லை'

2 mins read
160f6377-c3dc-4790-adb1-a136d1b89455
கல்வி அமைச்சர் சான் சுன் சிங். படம்:GOV.SG -

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமி தொற்­றிய 12 வய­துக்­கும் குறை­வான சிறு­வர்­க­ளுக்கு தீவிரமற்ற பாதிப்பே இருந்­துள்­ளது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

அவர்­களில் யாருக்­கும் இது­வரை தீவிர சிகிச்­சையோ உயிர் வாயு இயந்­தி­ரத்­தின் உத­வியோ தேவைப்­ப­ட­வில்லை என்று அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அந்த வய­தி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடும் சாத்­தி­யத்­தைப் பற்­றி­யும் அவர் பேசி­னார்.

பன்­னி­ரெண்டு வய­துக்­கும் குறை­வான பிள்­ளை­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் முன்­னோட்­டச் சோத­னை­கள கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கான நிபு­ணத்­து­வச் செயல்­குழு, கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அது தயா­ரா­கும் போது பரிந்­து­ரை­களை வெளி­யி­டும் என்­றும் திரு சான் கூறி­னார்.

அத்­து­டன் இளம் பிள்­ளை­ க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள் பற்­றி­யும் கல்வி அமைச்­சர் விவ­ரம் அளித்­தார்.

சிங்­கப்­பூர் கொவிட்-19 கிரு­மித் தொற்­று­டன் வாழப் பழ­கு­வதை நோக்­கிச் செல்­லும் வேளை­யில், பள்­ளி­கள் அவற்­றின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­தும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் இரண்­டாம் கட்­டத்­துக்கு விழிப்பு நிலையை உயர்த்தி­யுள்ள இந்­நி­லை­யில் 12 வய­துக்­­கும் குறை­வான பிள்­ளை­ களுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து பற்றி செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி ஹி டிங் ரூ கேட்ட கேள்­விக்கு திரு சான் பதில் அளித்­தார்.

கொவிட்-19 தொற்று பற்றி இது­வரை கிடைத்த தக­வல்­கள், பெரி­ய­வர்­கள், முதி­ய­வர்­கள் ஆகி­யோ­ரை­விட சிறு­வர்­க­ளுக்கு நோயால் குறை­வான பாதிப்பு ஏற்­ப­டு­வ­தைக் காட்­டு­வ­தாக அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் டெல்டா வகைக் கிருமி தொற்­றிய 12 வய­துக்­கும் குறை­வான சிறு­வர்­க­ளுக்­குக் கூட சிறிய பாதிப்பே ஏற்­பட்­டுள்­ளது என்­றார் அவர்.