மீட்சிப் பாதையில் உற்பத்தி, மின்னணுவியல் துறைகள்

மீட்சிப் பாதையில் உற்பத்தி, மின்னணுவியல் துறைகள்

2 mins read
e5511ed6-6785-48a4-813f-2e4473e735f1
-

சிங்­கப்­பூ­ரில் உற்­பத்­தித் துறை நடவடிக்கை தொடர்ந்து 13வது மாத­மாக கடந்த மாதம் வளர்ச்சி அடைந்­தது. 2018 டிசம்­ப­ருக்குப் பிறகு அது உச்­சத்தை எட்­டி­யது.

கொள்­மு­தல் நிர்­வா­கி­கள் குறி­யீடு (பிஎம்ஐ) கடந்த மாதம் 51ஆக பதி­வா­னது. ஜூன் மாதத்­து­டன் ஒப்­பு­நோக்க அது 0.2 புள்ளி அதி­கம். புளூம்­பெர்க் கருத்­துக்­க­ணிப்­பில் பொரு­ளி­யல் நிபு­ணர் முன்­னு­ரைத்­தி­ருந்த 50.8 புள்­ளி­யை­விட அது அதி­கம்.

பிஎம்ஐ குறி­யீட்­டில் 50க்கு மேல் பதி­வா­னால் அது வளர்ச்­சி­யைக் குறிக்­கிறது. மின்­ன­ணு­வி­யல் துறைக்­கான பிஎம்ஐ 50.8ஆக பதி­வா­னது. ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் அது 0.2 புள்ளி அதி­கம். தொடர்ச்­சி­யாக 12வது மாத­மாக அத்­துறை வளர்ச்சி கண்­டது.

சிங்­கப்­பூர் அண்­மை­யில் இரண்­டாம் கட்ட (உயர்த்­தப்­பட்ட விழிப்பு­நிலை) நடை­மு­றைக்­குத் திரும்­பி­ய­போது விநி­யோ­கத் தொடர் பாதிப்பு அடை­யக்­கூ­டும் என்று அஞ்சப்­பட்­ட­போ­தும், உற்­பத்தி மற்­றும் மின்­ன­ணு­வி­யல் துறை­கள் தொடர்ந்து வளர்ச்­சிப் பாதை­யில் செல்­வதை இந்த பிஎம்ஐ குறி­யீடு காட்­டு­வ­தாக வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், ஒட்­டு­மொத்த வேலை­வாய்ப்பு குறி­யீ­டும் தொடர்ந்து ஐந்து மாதங்­க­ளாக விரி­வ­டைந்து வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இறக்­கு­ம­தி­களும் வேக­மாக வளர்ச்சி கண்­டன. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அண்­மை­யில் கடு­மை­யாக்­கப்­பட்­ட­போ­தும் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் உற்­பத்­தித் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரு­வ­தாக சிங்­கப்­பூர் கொள்­மு­தல், பொருள் நிர்­வா­கக் கழ­கத்­தின் தொழில்­துறை ஈடு­பாடு, மேம்­பாட்­டுப் பிரி­வுக்­கான துணைத் தலை­வர் சோஃபியா போ கூறி­னார்.

புதிய ஆர்­டர், புதிய ஏற்­று­ம­தி­கள், தொழிற்­சாலை உற்­பத்தி, வேலை­வாய்ப்பு ஆகி­யவை வளர்ச்சி கண்டு வந்­த­தால் கடந்த மாதம் மின்­ன­ணு­வி­யல் துறைக்­கான பிஎம்ஐ குறி­யீடு சற்று கூடி­யது.

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்தி மற்­றும் மின்­ன­ணு­வி­யல் துறை­கள் தொடர்ந்து மீட்­சி­யு­டன் இருப்­ப­தா­க­வும் குறு­கி­ய­கால வளர்ச்­சிக்கு முக்­கிய தூணாக அவை விளங்­கு­வ­தா­க­வும் ஓசி­பிசி வங்­கி­யின் நிதி ஆய்வு, உத்­திப் பிரி­வின் தலை­வர் சலினா லிங் தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யில் உள்­நாட்டு உற்­பத்தி மித­மான வளர்ச்சி காணும் என தாம் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார். எனி­னும், முழு ஆண்டு உற்­பத்­தித் துறை வளர்ச்சி 10 விழுக்­காட்­டிற்­கும் மேல் இருக்­கும் என அவர் முன்­னு­ரைக்­கி­றார்.