இம்மாதத்தின் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் அன்றாட வெப்பநிலை 24க்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். இடியுடன் கூடிய மழை பெரும்பாலும் முற்பகல், பிற்பகல் வேளைகளில் பெய்யும் என முன்னுரைக்கப்படுகிறது. சில நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாக, இம்மாதத்தின் முதல் பாதியில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை சராசரி அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் ஒரு சில நாட்களில் சற்று வெப்பமான வானிலையையும் எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியது. அந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.

