மின் வர்த்தகத் தள விற்பனையில் வயது சரிபார்ப்பு இடம்பெறலாம்

மின் வர்த்தகத் தள விற்பனையில் வயது சரிபார்ப்பு இடம்பெறலாம்

2 mins read
37e04853-2f24-4407-906d-0148193cda9a
உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான். படம்: GOV.SG -

மின் வர்த்­த­கத் தளங்­களில் கோடரி மற்­றும் பல வகை­க­ளில் பயன்

­ப­டுத்­தக்­கூ­டிய பொருட்­களை ஒரு­வர் வாங்­கும்­போது, அவ­ரது வய­தைச் சரி­பார்க்­கும் முறையை அமல்­ப­டுத்த பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது என்று உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்­துள்­ளார்.

ஆயு­தம் என்று வகைப்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­க­ளின் பட்­டி­யலை மேலும் விரி­வுப­டுத்­து­வது பற்­றி­யும் நாம் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் எந்த ஒரு பொருள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டால் அது மற்­ற­வர்­க­ளுக்கு ஆபத்­தாக முடி­ய­லாம் என்­பது பற்­றி­யும் ஆரா­யப்­படும் என்­றும் திரு டான் விவ­ரித்­தார்.

மற்­ற­வர்­க­ளுக்கு ஆபத்தை விளை­விக்­கும் ஆயு­தங்­களை இள வய­தி­னர் வாங்­கு­வ­தைத் தடுக்க என்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்று தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டெஸ்­மண்ட் சூ கேட்ட கேள்­விக்கு அமைச்­சர் டான் பதி­ல­ளித்­தார்.

கடந்த மூன்று ஆண்­டு­களில், மற்­ற­வர்­க­ளுக்கு ஆபத்தை விளை விக்கக்­கூ­டிய ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­தற்­காக 131 இளை­யர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று அமைச்­சர் மேலும் கூறி­னார்.

கடந்த மாதம் 4ஆம் தேதி­யன்று, ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில்­ உயர்­நிலை ஒன்­றில் பயி­லும் மாண­வர் ஒரு­வர் பள்ளி நேரத்­தின்­போது கொலை செய்­யப்­பட்­டார். அவரை கொலை செய்­த­தாக, அதே பள்­ளி­யைச் சேர்ந்த உயர்­நிலை நான்கு மாண­வர் கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்­தில் அவர் மீது கொலைக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அந்த இரு மாண­வர்­கள் இதற்கு முன் அறி­மு­க­மா­ன­வர்­கள் அல்ல. கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­த­மா­கக் கரு­தப்­பட்ட ஒரு கோட­ரியை அந்த மாண­வர் இணை­யத்­தில் வாங்­கி­ய­தாக முதற்­கட்ட விசா ரணை­யில் தெரிய வந்­தது.

ஆயு­தங்­கள் மற்­றும் வெடி­

பொ­ருள் சட்­டத்­தின்­படி ஆறு ஆயு­தங்­கள் தடை செய்­யப்­பட்ட பொருட்­கள் என்று உள்­துறை அமைச்சு வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நீண்ட வாள், ஈட்டி, ஈட்­டித் தலை­கள், குத்­து­வாள், இடை­வாள், சில வகை வில்லுகளும் அம்­பு­களும் ஆகி­ய­வையே அந்த ஆறு வகை ஆயு­தங்­கள்.

இத்­த­கைய ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோர் பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்­றும் அவற்­றின் உரி­மை­யா­ளர்­கள் அவற்­றைப் பாது­காப்­பான இடத்­தில் வைக்க வேண்­டும் என்­றும் திரு டான் வலி­யு­றுத்­தி­னார்.

"இத்­த­கைய ஆயு­தங்­களை வாங்குவோ­ரின் வய­தைச் சரி­பார்க்­கும் முறையை மின் வர்த்­த­கத் தளங்­களும் சில்­லறை விற்­ப­னைக் கடை­களும் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்ற விதி­மு­றையை அமல்­ப­டுத்த அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது. அப்­போ­து­தான் வயது குறைந்­த­வர்­க­ளின் கைகளில் அத்­த­கைய ஆயு­தங்­கள் கிடைக்­கும் வாய்ப்­பைத் தடுக்க முடி­யும்," என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்­குப் பதி­ல­ளித்த உள்­துறை அமைச்சு, "எப்­ப­டிப்­பட்ட விதி­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வது என்­பது குறித்து இன்­னும் ஆரா­யப்­பட்டு வரு­கிறது. அந்த விதி

­மு­றை­கள் துப்­பாக்­கி­கள், வெடி

பொ­ருட்­கள், ஆயு­தங்­கள் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் இருக்­கும்," என்று தெரி­வித்­தது.