தொடங்கும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே நிர்ணயிக்கலாம்

தொடங்கும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே நிர்ணயிக்கலாம்

2 mins read
a822763d-0d67-46d2-bd58-17d05a003572
-

மாண­வர்­க­ளுக்­குப் போது­மான தூக்­கம் இருப்­பதை உறுதி செய்ய நேரம் கழித்து வகுப்­பு­க­ளைத் தொடங்க பள்­ளி­க­ளுக்கு முழு சுதந்­தி­ரம் இருப்­ப­தாக கல்வித் துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங் தெரி­வித்­தார். இருப்­பி­னும், தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு போது­மான தூக்­கம் இருப்­பதை பெற்­றோ­ரும் உறுதி செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

பள்­ளி­கள் தொடங்­கும் நேரத்தை மாற்­றி­ய­மைக்க அர­சாங்­கம் பரி­

சீ­லித்து வரு­கி­றதா என்ற பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேமஸ் லிம்­மின் கேள்­விக்கு திரு­வாட்டி சுன் பதி­ல­ளித்­தார்.

தற்­போது பள்­ளி­கள் காலை 7.30 மணிக்கு முன்பு தொடங்­கு­வ­தில்லை. பெற்­றோ­ரி­ட­மி­ருந்து பெறப்­படும் கருத்­து­கள், பள்ளி முடி­யும் நேரம், போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­கள், பள்­ளி­யைச் சுற்­றி­யுள்ள வட்­டா­ரங்­களில் நில­வும் போக்­கு­வ­ரத்து சூழல் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு நேரம் கழித்து வகுப்­பு­

க­ளைத் தொடங்க பள்­ளி­கள் முடி­வெ­டுக்­க­லாம் என்­றார் திரு­வாட்டி சுன்.

தூக்­கப் பற்­றாக்­கு­றை­யால் பல்­வேறு பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தைத் திரு­வாட்டி சுன் சுட்­டி­னார். மாண­வர்­கள் எத்­தனை மணி நேரம் தூங்குகின்­ற­னர் என்­ப­தை­யும் அது அவர்­க­ளது வாழ்க்­கைத் தரத்தை எவ்­வாறு பாதிக்­கிறது என்­ப­தை­யும் கண்­டு­பி­டிக்க இரண்டு ஆய்­வு­

க­ளுக்­குக் கல்வி அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக திரு­வாட்டி சுன் கூறி­னார்.

"நேரம் கழித்து பள்­ளி­க­ளைத் தொடங்­கு­வது மட்­டு­மல்­லாது, மாண­வர்­கள் போது­மான தூக்­கம் பெறு­வது, அவர்­க­ளது வேலைப் பளுவை நிர்­வ­கிப்­பது, மின்­னி­லக்­கச் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்றை உறுதி செய்ய பெற்­றோ­ரு­டன் இணைந்து செயல்­பட வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி சுன்.

உயர்­நி­லைப்­பள்­ளி­கள் வெவ்­வேறு நேரங்­களில் தொடங்­கும் முறை­யைக் கல்வி அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து இணைப் பேரா­சி­ரி­யர் ஜேமஸ் லிம் தமது பரிந்­துரையை முன்­வைத்­தார். பதின்­ம­வ­ய­தி­ன­ருக்கு இந்த அணுகு­ முறை பல­னைத் தரு­வ­தாக மூன்று அறிவியல் நிபுணர்கள் தெரி­வித்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார். நடத்­தப்­படும் ஆய்­வு­க­ளின் முடி­வு­க­ளைக் கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார் அவர்.

கொவிட்-19 பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யா­கப் பள்­ளி­கள் வெவ்­வேறு நேரங்­களில் தொடங்­கும் முறையை ஏற்­கெனவே கடைப்­பி­டித்து வரு­வ­தாக திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார்

தங்­கள் பிள்­ளை­கள் இரவு நேரங்­களில் நீண்­ட­நே­ரம் விழித்­தி­ருக்­கா­மல் சீக்­கி­ரம் தூங்க செல்­வதை உறுதி செய்ய பெற்­றோரை பள்­ளி­கள் ஊக்­கி­விக்க வேண்­டும் என்று மவுண்­பேட்­டன் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லிம் பியாவ் சுவான் கூறி­னார்.

"என் பிள்­ளை­கள் சிறு வய­தி­ன­ராக இருந்­த­போது அவர்­களை இரவு நேரத்­தில் சீக்­கி­ரம் தூங்க சொல்­வேன்.

"இத­னால் எவ்­வி­தப் பிரச்­சி­னை­யும் இன்றி அவர்­க­ளால் பள்­ளிக்­குச் செல்ல முடிந்­தது. எனவே, நேரம் கழித்து பள்­ளி­க­ளைத் தொடங்­கு­வ­தற்­குப் பதி­லாக பிள்­ளை­களை சீக்­கி­ரம் தூங்க வைப்­பதை நாம் ஏன் பரி­சீ­லிக்­கக்­

கூ­டாது?" என்று திரு லிம் தமது கருத்தை முன்­வைத்­தார்.