இடைக்கால வாடகை வீடுகள் அதிகரிப்பு

இடைக்கால வாடகை வீடுகள் அதிகரிப்பு

2 mins read
261c2704-e8ff-4271-9bfe-d8db02a30bdb
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மேலும் 800 இடைக்­கால வாடகை வீடு­கள் ஒதுக்­கி­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. தேவைக்­கேற்­பக் கட்­டித்­த­ரப்­படும் (பிடிஓ) வீடு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் குடும்­பங்­க­ளுக்­காக இவ்­வீ­டு­கள் ஒதுக்கி வைக்­கப்­ப­டு­கின்­றன. கட்­டு­மான வேலை­கள் தள்­ளிப்­போ­வ­தால் பாதிக்­கப்­பட்­டோ­ரும் இவ்­வா­டகை வீடு­க­ளுக்­குத் தகு­தி­பெ­ற­லாம். இருப்­பி­னும், விண்­ணப்­பிப்­போ­ருக்­கான விதி­மு­றை­கள் மேலும் கடு­மை­யா­கப்­பட்­டுள்­ளன.

இதன்­படி 'பிபி­எச்­எஸ்' எனப்­படும் பிள்­ளைப்­பேறு இடைக்­கால குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பிக்க விரும்­பு­வோ­ரது ஒட்­டு­மொத்த மாதாந்­திர வீட்டு வரு­மானம் $7,000க்கு மேல் இருக்க முடி­யாது என்று வீவக நேற்று தெரி­வித்­தது.

இப்­பு­திய விதி­முறை இன்­று­முதல் நடை­மு­றைக்கு வரு­கிறது.

பிடிஓ வீட்­டுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட விற்­பனை விண்­ணப்­பத்­தில் குறிப்­பி­டப்­பட்ட வரு­மா­னத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு வாடகை வீட்­டுக்­கான விண்­ணப்­பம் கரு­தப்­படும் என்­றது கழ­கம்.

இதற்­கி­டையே, வீட்டு விற்­பனை விண்­ணப்­பத்­தைச் சமர்ப்­பித்த பின் வரு­மா­னம் $7,000க்குக்­கீழ் குறைந்­தி­ருந்­தால் கழ­கத்­து­டன் நேர­டி­யாகத் தொடர்­பு­கொண்டு உதவி நாட­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

வரு­மான உச்ச வரம்பை இவ்­வாறு விதிப்­ப­தால், அதி­க­ளவு மானிய உத­வி­யில் வழங்­கப்­படும் வாடகை வீடு­கள் உரி­ய­வ­ரைச் சென்­ற­டை­யும் என்­றது வீவக. இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­னர், சொத்­துச் சந்­தை­யில் உள்ள வீடு­க­ளுக்கு வாடகை கட்ட இய­லாத நிலை­யில் உள்­ள­வர்­கள்.

'பிடிஓ' வீடு­கள் தயா­ரா­கும்­வரை பிள்­ளை­ப்பேறு இடைக்­கால குடி­யிருப்­புத் திட்­டத்­தின்­கீழ் தகு­தி­பெறு­வோருக்கு இடைக்­கால வாடகை வீடு­கள் குலுக்­கல் முறை­யில் வழங்­கப்­படும். மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள ஈரறை வீட்­டுக்கு $400, ஹவ்­காங் வட்­டாரத்­தின் மூவறை வீட்­டுக்கு $600, தியோங் பாரு வட்­டா­ரத்­தில் உள்ள நான்­கறை வீட்­டுக்கு $1,500 என வாடகை வேறு­ப­டு­கிறது.

திரு­ம­ண­மான தம்­ப­தி­ய­ருக்­குப் 18 வயது அல்­லது அதற்­குக் குறை­வான வய­தில் பிள்­ளை­கள் இருந்­தால், பிபி­எச்­எஸ் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­றும் விண்­ணப்­ப­தா­ரர்­களில் அவர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். குழந்தை பிறக்­க­வுள்ள நிலை­யில் பெற்­றோ­ரா­க­வுள்­ளோருக்­கும் இது பொருந்­தும்.

இதற்­கி­டையே, பிபி­எச்­எஸ் திட்­டத்­தின்­கீழ் வாடகை வீட்­டைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­காக அழைப்பு விடுத்­தும் இரண்டு முறை வரா­தோர், மீண்­டும் திட்­டத்­தின்­கீழ் தகு­தி­பெ­று­வ­தற்­காக விண்­ணப்­பிக்க ஓராண்டு காலம் காத்­தி­ருக்க நேரி­டும். அதே­போல் பிபி­எச்­எஸ் வாடகை வீட்­டைத் தேர்ந்­தெ­டுத்த பின்­னர், கட்­ட­ணம் செலுத்­தா­த­வ­ரும் காத்­தி­ருக்க நேரும்.

கடந்த ஆண்­டில் இத்­திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தும் விண்­ணப்­பித்­த­வர்­களில் 50 விழுக்­காட்­டி­னர், வீட்­டைத் தேர்ந்­தெ­டுக்க வர­வில்லை என்­பதே இவ்­வி­தி­முறைக்­குக் கார­ணம்.

மாத அடிப்­ப­டை­யில் இது­வரை நடந்­து­வந்த பிபி­எச்­எஸ் தெரி­வுத் திட்­டம், இனி இரண்டு மாதங்­களுக்கு ஒரு­முறை நடை­பெ­றும். வாட­கைக்கு விடு­வ­தற்­கான அனைத்து வீடு­க­ளை­யும் ஒருங்­கிணைத்து விண்­ணப்­பித்­த­வர்­களுக்­குக் கூடு­தல் தெரி­வு­களை வழங்க இது ஏற்­ற­தாக இருக்­கும் என்று கூறப்­பட்­ட­து.