தொடக்கநிலை 1 2சி கட்ட பதிவு தொடக்கம்

தொடக்கநிலை 1 2சி கட்ட பதிவு தொடக்கம்

1 mins read
b30abda7-9870-4394-b418-41c81df7d6aa
-

போட்டி மிகுந்­த­தா­கக் கரு­தப்­படும் 2சி கட்ட தொடக்­க­நிலை 1 பதிவு நேற்று தொடங்­ ­கியது. ஏழு கட்­டங்­களில் ஐந்­தா­வது பதி­வின்­போது எவ்­வித முன்­னு­ரி­மை­யை­யும் அனு­ப­விக்­காத சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கா­னது. மேலும் பள்­ளிக்­கும் வீட்­டுக்­கும் இடைப்­பட்ட தூரத்­தின் அடிப்­ப­டை­யில் இந்­தப் பதிவு அமை­கிறது. முந்­திய கட்­டங்­

க­ளைக் காட்­டி­லும் இந்­தக் கட்­டத்­தில்­தான் அதி­க­மான பள்­ளி­கள் குலுக்­கல் முறை தேர்ந்­தெ­டுப்­பைக் கையா­ளும். கடந்த ஆண்டு 99 பள்­ளி­கள் இந்த 2சி கட்­டப் பதிவை குலுக்­கல் முறை­யில் நடத்­தின. அதே­நே­ரம் 2பி-க்கு 22 பள்­ளி­களும் 2ஏ2 பதி­வுக்கு 14 பள்­ளி­களும் குலுக்­கல் முறை­யைப் பயன்­ப­டுத்­தின. மாண­வர் சேர்க்­கை­யில் இடம்­வ­கிக் கும் 186 பள்­ளி­க­ளுள் கிட்­டத்­தட்ட பாதி அளவு அல்­லது 101 பள்­ளி­களில் கடந்­தாண்டு 2சி பதி­வின்­போது காலி இடத்­திற்­கும் அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­தன.

இவ்­வாண்டு பதி­வுப் பட்­டி­ய­லில் 181 பள்­ளி­கள் உள்­ளன. இவற்­றில் 12 பள்­ளி­களில் தலா 20 இடங்­கள் மட்­டுமே காலி­யாக உள்­ள­ன. நாளை மாலை 4.30 மணி வரை இணை­யம் வாயி­லாக பெற்­றோர் விண்­ணப்­பிக்­க­லாம். முடி­வு­கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளி­யாகும்.