செய்திக்கொத்து

3 mins read
29819f0d-2db7-4a5a-ad90-02cc0eda4985
-

தொழில்நுட்பக் கல்விக்கழகத்துக்கு புதிய தலைவர் நியமனம்

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கத்­தின் மூன்­றா­வது தலை­வ­ராக பேரா­சி­ரி­யர் சுவா கீ சைங் நிய­மிக்­கப்­பட்டு

உள்­ளார். ஒன்­பது ஆண்­டு­கள் அந்­தப் பத­வி­யில் இருந்த பேரா­சி­ரி­யர் டான் தியாம் சூன் வில­கிச் செல்­வ­தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜன­வரி 1 முதல் திரு சுவா அந்­தப் பொறுப்பை ஏற்­பார் என்று கழ­கத்­தின் அறிக்கை தெரி­விக்­கிறது. 2019 செப்­டம்­ப­ரில் கழ­கத்­து­டன் இணைந்த பேரா­சி­ரி­யர் சுவா தற்­போது துணைத் தலை­வர் (அகா­டெ­மிக்) பத­வி­யில் உள்­ளார். பய­னுறு கற்­றல் மற்­றும் ஆராய்ச்­சித் துறை­களை மேம்­ப­டுத்­திய பெருமை இவ­ருக்கு உண்டு என்­றது அறிக்கை.

பள்ளிச்சிறுமிகளைத் தேடிச் சென்று ஆபாசப் படம் எடுத்த இளையர்

ஒல்­லி­யான தேக­மு­டைய பள்­ளிச் சிறு­மி­க­ளைத் தேடிச் சென்று அவர்­க­ளின் பாவா­டைக்­குள் படம் எடுத்து வந்த குற்­றத்தை 16 வயது இளை­யர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். மலே­சிய நிரந்­த­ர­வா­சி­யான அந்த இளை­ய­ரைப் பற்­றிய விவ­ரங்­களும் பாதிக்­கப்­பட்ட சிறு­மி­க­ளின் விவ­ரங்­களும் அவர்­

க­ளின் அடை­யா­ளங்­க­ளைப் பாது­காக்­கும் பொருட்டு வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 2019ஆம் ஆண்­டுக்­கும் இவ்­வாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் பள்­ளிச்­சி­று­மி­களை ஆபா­ச­மாக அந்த இளை­யர் பட­மெ­டுப்­பதை வாடிக்­கை­யாகக் கொண்­டி­ருந்­தார். பாதிக்­கப்­பட்ட சிறு­மி­க­ளுள் ஒரு­வர் தொடக்­கப் பள்ளி மாணவி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பாலி­யல் தோற்­றத்­தைப் பார்த்து மகி­ழும் மூன்­று­வி­தக் குற்­றங்­களை இளை­யர் ஒப்­புக்­கொண்­டார். பாவா­டைக்­குள் எடுக்­கப்­பட்ட படங்­களை சேமித்து அவற்றை மற்­ற­வர் பார்க்க இயலா வண்­ணம் மறைச்­சொற்­க­ளால் பாது­காத்து வந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பேருந்து நிறுத்­தங்­க­ளி­லும் எம்­ஆர்டி நிலை­யங்­க­ளி­லும் பள்­ளிச் சீரு­டை­யில் மாண­வி­கள் தென்­பட்­டால் அவர்­

க­ளின் அரு­கில் சென்று ஆபா­சப் படம் எடுத்து வந்­த­தாக புகார் வந்­த­தும் போலி­சார் விசா­ர­ணை­யில் இறங்­கி­னர்.

ஆபா­சப் பட­மெ­டுக்க அவர் பயன்­ப­டுத்­திய கைபேசி பறிக்­கப்­பட்­ட­போ­தி­லும் மேலும் இரு கைபே­சி­க­ளி­லும் அந்­தப் படங்­கள் இருந்­தன. மூன்று கைபே­சி­க­ளி­லும் 58 ஆபா­சப் படங்­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. மன­ரீ­தி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வரா என்­பதை அறிய மன­நல சுகா­தா­ரக் கழக அதி­கா­ரி­கள் அந்த இளை­ய­ரைப் பரி­சோ­தித்­த­னர். ஆனால் அவர் எவ்­வித மனக்­கோ­ளாற்­றா­லும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என பரி­சோ­த­னைக்­குப் பின் தெரிய வந்­தது. அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கு விசா­ரணை தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி

சிங்கப்பூர் ஆயுதப் படை பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சியை மரினா பேயில் நடத்தி உள்ளது. திங்கட்கிழமை இரவு சிறப்பு செயலாக்கப் படை வீரர்களை கட்டடம் ஒன்றின் வெளிப்பகுதியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் சூப்பர் பூமா ஹெலிகாப்டர்கள் இறக்குவது திறம்பட செய்து காட்டப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய வீரர்கள் கட்டடத்திற்குள் புகுந்து அங்கு பணய மாக வைக்கப்பட்டவர்களை, மிரட்டல்களுக்கு இடையே சாதுர்யமாக மீட்கும் பாவனைப் பயிற்சி இடம்பெற்றது. பயங்கரவாதம், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் போது அவற்றை முறியடிக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் பயிற்சி நடத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது. முதல்முறையாக எஃப்1 கார் பந்தய கட்டடத்தில் பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. திங்கட்கிழமை தொடங்கிய பயிற்சி நேற்றுக் காலை வரை நீடித்தது. பயிற்சிக்காக அந்த மூன்று மாடிக் கட்டடம் தடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டு பொதுமக்கள் அவ்விடத்தை நெருங்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டனர்.

மியன்மார் மனிதாபிமான உதவிக்கு சிங்கப்பூர் $135,000 பங்களிக்கும்

மியன்மாருக்கான மனிதாபிமான உதவிக்கு சிங்கப்பூர் S$135,000 மதிப்புள்ள பங்களிப்பை செய்யும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். ஆசியான் வட்டார வெளியுறவு அமைச்சர் களை இணையம் வழியாகச் சந்தித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். "மியன்மார் நிலவரம் தொடர்ந்து பெருங்கவலைக்குரியதாக உள்ளது. அதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆசியான் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐந்து அம்ச கருத்திணக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவ சியத்தை நாங்கள் அப்போது வலியுறுத்தினோம்," என்று திரு விவியன் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி வாங்கும் வகையில் கொவிட்-19 சமாளிப்பு நிதியை ஒருங்கிணைந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.