செய்திக்கொத்து

2 mins read
d3648525-04b2-45ca-818b-421398a40d70
-

என்யுஎஸ் மாணவர்களுக்கு முன்னோடி கொவிட்-19 பரிசோதனை

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக (என்யுஎஸ்) மாண­வர்­களும் அலு­வ­லர்­களும் புதி­ய­தொரு கொவிட்-19 பரி­சோ­தனை முறையை வரும் 10ஆம் தேதி முதல் தங்­க­ளைத் தாங்­களே செய்து பார்ப்­பார்­கள். விரைவு மற்­றும் எளிது (FET) என்­னும் அடிப்­ப­டை­யி­லான அந்த முன்­னோடி பரி­சோ­தனை முறை­யை விளக்கி மாண­வர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட சுற்­ற­றிக்கை ஒன்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளின் கவ­னத்­துக்கு வந்­தது. பரி­சோ­த­னைச் சாத­னம் ஒன்று மாண­வர்­க­ளுக்­கும் அலு­வ­லர்­க­ளுக்­கும் கொடுக்­கப்­படும்.

பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் தங்­கி­யி­ருப்­ப­வரா என்­ப­தைப் பொறுத்­தும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விவ­ரத்­தைப் பொறுத்­தும் அவர்­கள் அந்த சாத­னம் மூலம் தங்­க­ளைத் தாங்­களே பரி­சோ­தித்­துக்கொள்­ள­லாம்.

பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் தங்­கி­யி­ருக்­கும் மாண­வர்­களும் அலு­வ­லர்­களும் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டி­ருந்­தால் மாதம் ஒரு­முறை அவர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போது­மா­னது. அதே­நே­ரம் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களும் ஒரு தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்­கொண்­ட­வர்­களும் வாரா வாரம் கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­வார்­கள்.

ஜப்பானின் ஒலிம்பிக் அனுபவம் நமக்குப் பாடம்: மன்ற நாயகர்

தோக்­கியோ 2020 விளை­யாட்­டுப் போட்­டி­களை ஜப்­பான் நடத்­தும் விதம் கொவிட்-19 இடர்ப்­பாட்டை சமா­ளிப்­பது என்­ப­தற்­கு­ரிய பாட­மாக அமைந்­துள்­ளது என்று சிங்­கப்­பூர் நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தெரி­வித்­துள்­ளார். சிங்­கப்­பூர் ஒலிம்­பிக் மன்­றத் தலை­வ­ரு­மான திரு டான் தற்­போது தோக்­கி­யோ­வில் உள்­ளார். எல்­லை­க­ளைத் திறந்து வெளி­நாட்­டி­னரை வர­வேற்­கக் காத்­தி­ருக்­கும் சிங்­கப்­பூ­ருக்கு இந்­தப் பாடம் பொருத்­த­மான ஒன்று என்­றார் அவர்.

கொவிட்-19 சிர­மங்­க­ளுக்கு இடையே தோக்­கியோ போட்­டி­க­ளை­யும் உடற்­கு­றை­யுள்­ளோருக்­கான விளை­யாட்­டு­க­ளை­யும் ஜப்­பான் உல­கிற்­குத் தந்­துள்ள வெகு­மதி என்­றார் அவர். சாதிக்­கும் உணர்­வு­களை மேலெ­ழுப்­பும் வகை­யி­லான விளை­யாட்­டுத் திறன்­கள் மூலம் இவ்­வி­ரண்­டும் சாத்­தி­ய­மாகி உள்­ளன என்­றும் திரு டான் கூறி­னார்.

"கொவிட்-19 நிலைமையைச் சமா­ளிப்­பது என்­பது ஆபத்­து­க­ளைச் சமா­ளிப்­ப­தன் தொடர்­பி­லா­னது. மேலும் எந்­த­ள­வுக்கு நீங்­கள் சிர­மங்­க­ளைத் தாங்­கும் சக்தி படைத்­த­வர்­கள் என்­ப­தை­யும் பொறுத்­தது," என்று தோக்­கி­யோ­வைத் தள­மா­கக் கொண்ட ஊட­கம் ஒன்­றி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார். நாடா­ளு­மன்ற நாய­கர் என்ற முறை­யில் மேற்­கொண்ட 3 நாள் அதி­காரத்­துவ வரு­கை­யின் முடி­வில் அவர் அந்த ஊட­கத்­தின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார்.

$461,000 கையாடல் வழக்கில் சிறை

முதலீட்டு நிறுவனங்களில் $461,000க்கு மேற்பட்ட தொகையைக் கையாடியவர்களில் ஓர் ஆடவருக்கு நேற்று ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லோ ஸி சியாங், 31, எனப்படும் அவர் தம் மீதான இரு நம்பிக்கை மோசடிக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். மோசடி மூலம் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை கார் வாங்க அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.