எல்லாரையும் உள்ளடக்கும் வீடமைப்புக்கு இரு அம்சங்கள் அமைச்சர்: இன ஒருங்கிணைப்புக் கொள்கை; அனைவருக்கும் எட்டும் நிலையில் வீடுகள்

எல்லாரையும் உள்ளடக்கும் வீடமைப்புக்கு இரு அம்சங்கள் அமைச்சர்: இன ஒருங்கிணைப்புக் கொள்கை; அனைவருக்கும் எட்டும் நிலையில் வீடுகள்

2 mins read
71cf8236-02a2-4450-abd9-ee2a175264f9
-

சிங்­கப்­பூ­ரில் பொது வீட­மைப்பு எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக, எல்­லா­ருக்­கும் எட்­டக்­கூ­டியதாக இருக்க வேண்­டும் என்­ப­தால் அது பற்றி ஆழ­மாகச் சிந்­திக்க வேண்டிய தேவை சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கிறது என்று இரண்டாவது தேசிய வளர்ச்சி அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­துள்­ளார்.

சிங்கப்பூரில் அதி­க­ரித்து வரும் வரு­வாய் ஏற்­றத்­தாழ்வை பிர­தி­பலிக்­கும் நிலையில் வீட்டுச்சந்தை இருக்கிறது. இந்தச் சூழ­லில் இந்தச் சிந்தனை அவ­சி­ய­மா­கிறது என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

அக்­கம்­பக்­கங்­கள் தொட­ர்ந்து பன்­ம­ய­மாக இருப்­பதை உறு­திப்­படுத்த இன ஒருங்­கி­ணைப்­புக் கொள்கை முக்­கி­யம் என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

ஹுட்­டன்ஸ் வரு­டாந்­திர பேர வை­யில் நிலச்­சொத்து முக­வர்­களி­டையே நேற்று உரை­யாற்­றிய குமாரி இந்­தி­ராணி, பிர­தான இடங்­களில் பொதுக் குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­படும்­போது வரு­வாய் ஏற்­றத்­தாழ்­வும் வீட­மைப்­பில் அதன் தாக்­க­மும் இன்­னும் முக்கியமான அம்­ச­மாக இருக்­கும் என்று தெரி­வித்­தார்.

"பொரு­ளி­யல் மேம்­படும் நிலை­யில், சமூ­கப் பொரு­ளி­யல் அந்­தஸ்­தின் அடிப்­ப­டை­யில் குறிப்­பிட்ட பேட்­டை­களில் மக்­கள் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்த வலு­வான பொரு­ளி­யல் சமூக சக்­தி­கள் கார­ண­மாக இருந்து வந்­துள்­ளதை நாம் பார்த்து வந்­தி­ருக்­கி­றோம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

முக்­கி­ய­மான இடங்­களில் உரு­வாக்­கப்­படும் பொதுக் குடி­யி­ருப்புப் பேட்­டை­கள் காலப்­போக்­கில் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே தொடர்ந்து இருந்து வரும் என்பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் குமாரி இந்­தி­ராணி தெரி­வித்­தார்.

இதற்குப் பிரதான இடங்களில் புதிய பாணி வீட­மைப்பு தேவைப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

முதல்­மு­றை­யாக வீடு வாங்­கு­வோ­ருக்கு மட்­டு­மின்றி பிறகு மறு­விற்­பனை வீடு­களை வாங்­கு­வோருக்­கும் அத்­த­கைய வீடு­கள் எட்­டும் நிலை­யில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் நிச்­ச­ய­மில்­லாத பொரு­ளி­யல் சூழ்­நி­லை­யைக் கருத்­தில்­கொள்ள வேண்­டும். விவே­க­மான நிதி முடி­வு­க­ளைச் செய்து அவர்­கள் சொத்­து­களை வாங்க வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சொத்­துச் சந்தை சுறு­சு­றுப்­பாக இருக்­கிறது என்­றா­லும் சொத்து விலை உயர்­வு­கள் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டிய நிலை­யில் இருந்து வர­வேண்­டும் என்­பதே சிங்­கப்­பூரின் நோக்கமாக இருந்து வந்­துள்­ளது என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பல சிங்­கப்­பூ­ரர்­களை பொறுத்­த­வரை­ வீட்டை வாங்­கு­வது என்­பது அவர்கள் செய்­யும் தனித்த ஆகப் பெரிய கொள்­மு­த­லாக இருக்­கும். வீடு வாங்­கும் ஒரு­வர் அதற்கான கடனை அடைக்க முடி­யா­மல் போனால் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நிதி மற்றும் சமூகத் தாக்­கங்­கள் கணி­ச­மாக இருக்­கும் என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.