சில்லறை வர்த்தகம் 25.8% கூடியது

2 mins read
6c5e3210-edf2-4716-992b-747c33abf353
-

சிங்கப்­பூ­ரில் சில்­லறை வர்த்­த­கம் சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஜூனில் 25.8% கூடி­யது.

கொவிட்-19 கார­ண­மாக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் சென்ற ஆண்­டில் நடப்­பில் இருந்­தன. இத­னால் சென்ற ஜூனில் வர்த்­த­கம் குறை­வா­கவே இருந்­தது.

சென்ற ஆண்டு மே மாதம் முழு­வ­தும் பொரு­ளி­யல் முடக்­கம் நடப்­பில் இருந்­தது. ஆகை­யால் இந்த ஆண்டு மே மாதம் சில்­லறை வர்த்­த­கம் 79.9% அதி­க­மாகி இருந்­தது. அது, இந்த ஆண்டு மே மாதத்­தை­விட ஜூன் மாதம் குறை­வா­கவே கூடி­யது.

சில்­லறை வர்த்­த­கம் கொரோ னாவுக்கு முந்­தைய நிலை­யை­விட தொடர்ந்து குறைவாகவே இருந்து வரு­கிறது என்­பதை சிங்­கப்­பூர் புள்­ளி­வி­வ­ரத் துறை சுட்­டிக்­காட்­டி­யது. மோட்­டார் வாக­னங்­களை நீக்­கி­விட்­டுப் பார்க்­கை­யில் சில்­லறை வர்த்­த­கம் ஜூன் மாதம் 19% கூடி­யது.

இந்த அதி­க­ரிப்பு மே மாதம் 61.7% ஆக இருந்­தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்த சில்­லறை வர்த்­த­கத்­தின் மதிப்பு ஏறத்­தாழ $3.3 பில்­லி­யன் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதில் இணை­யம் வழி­யாக நடந்த விற்­ப­னை­க­ளின் மதிப்பு 15.4 விழுக்­கா­டாக இருக்­கும் என்று கணக்­கி­டப்­பட்டு இருக்­கிறது. இணை­யம் வழி இடம்­பெற்ற வர்த்­தக ஊக்­கு­விப்பு செயல்­திட்­டங்­களே இதற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தது. இந்த அளவு மே மாதத்­தில் 13.8 விழுக்­கா­டாக இருந்­தது.

மோட்­டார் வாக­னங்­களை சேர்க்­கா­மல் பார்க்­கும்­போது மொத்த சில்­லறை வர்த்­த­கத்­தின் மதிப்பு ஏறத்­தாழ $2.7 பில்­லி­யன். இதில் கணினி வழி நடந்த வர்த்­த­கத்­தின் மதிப்பு 18.4% என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கணினி, தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­கள், அறை­க­லன்­கள், வீட்டு சாமான்­கள் போன்­றவை ஜூன் மாதம் இணை­யம் வழி அதி­க­மாக விற்­ப­னை­யா­யின.