பணிப்பெண் துன்புறுத்தலை கண்டறிய கூடுதல் அம்சங்கள்

உடல் எடை தொடர்­பான 'பிஎம்ஐ' குறி­யீட்டை அள­வி­டு­வது, துன்­புறுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்ள தழும்பு­களை உட­லில் அடை­யாளம் காண்­பது போன்ற கூடு­தல் அம்­சங்­கள், ஆறு மாதத்­திற்கு ஒரு முறை வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் செய்­து­கொள்­ளும் மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் சேர்க்­கப்­ப­ட­வுள்­ளன.

இம்­மா­தம் 29ஆம் தேதி­மு­தல் கருத்­த­ரித்­தல், தொற்­று­நோய் ஆகி­யவை தொடர்­பில் மட்­டும் பணிப்­பெண்­க­ளைப் பரி­சோ­திக்­கா­மல் மருத்­து­வர்­கள் துன்­பு­றுத்­தல் தொடர்­பான அறி­கு­றி­க­ளை­யும் அடை­யா­ளம் காண்­பர்.

மேலும், உதவி கேட்­ப­தற்­குப் பாது­காப்­பான சூழ­லைப் பணிப்­பெண்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தித் தரும் வகை­யில் முத­லா­ளி­கள் பரி­சோ­தனை அறைக்­குள் செல்ல அனு­மதிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது. வீட்­டில் இருந்­த­வாறு மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தும் அனு­ம­திக்­கப்­ப­டாது.

பரி­சோ­தனை முடிவு தொடர்­பி­லான அனைத்து மருத்­து­வப் பரி­சோ­த­னை பத்­தி­ரங்­க­ளை­யும் மருந்­த­கங்­கள் மனி­த­வள அமைச்­சி­டம் அனுப்­ப­வேண்­டும்.

இல்­லப் பணிப்­பெண்­க­ளின் எடை, உய­ரம் போன்­ற­வற்­றைப் பதி­வு­செய்து 'பிஎம்ஐ' குறி­யீட்டை மருத்­து­வர்­கள் குறித்து வைத்­துக்­கொள்­வ­தால் நாள­டை­வில் குறிப்­பி­டத்­தக்க எடை குறைவு போன்ற எச்­ச­ரிக்கை அறி­கு­றி­கள் எழும்­போது தங்­க­ளின் பதி­வு­களை அவர்­கள் ஒப்­பிட்டு விசா­ரணை கோர உத­வ­லாம்.

சந்­தே­கத்­திற்­கு­ரிய, கார­ணம் கூற முடி­யாத காயங்­கள் தொடர்­பில் பின்­னர் அதி­கா­ரி­களும் விசா­ர­ணையைத் தொடர்­வர்.

சுகா­தார அமைச்சு, மருத்­து­வர்­கள், முத­லா­ளி­கள், பணிப்­பெண் நிறு­வ­னங்­கள் ஆகிய தரப்பு­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­திய பிறகு இந்த மாற்­றங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.

பணிப்பெண்ணுக்கு உணவு தரா­தது, துன்­பு­றுத்­து­வது தொடர்­பில் பல சம்­ப­வங்­கள் நேர்ந்­ததை அடுத்து இப்­பு­திய நடை­மு­றை­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

மியன்­மா­ரைச் சேர்ந்த பணிப்­பெண்­ணுக்­குப் போது­மான உணவு தரா­ம­லும் பல்­வேறு கொடு­மை­கள் இழைத்­தும் பணிப்­பெண்­ணின் மர­ணத்­திற்­குக் கார­ண­மா­னார் அவரின் முத­லாளி காயத்ரி முரு­கை­யன். ஏப்­ர­லில் அவ­ருக்கு 30 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. உயி­ரி­ழக்­கும்­போது அந்­தப் பணிப்­பெண்­ணின் எடை 24 கிலோவாக இருந்தது. அவர் தன் பணிப்­பெண் பொறுப்பை காயத்­ரி­யின் வீட்­டில் தொடங்­கி­ய­தி­லி­ருந்து தன் பிஎம்­ஐ­யின் 38 விழுக்­காட்டை இழந்­து­விட்­ட­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

மற்­றொரு சம்­ப­வத்­தில் இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்­ணுக்குத் தொடர்ந்து அவர் முத­லாளி கொடுமை இழைத்து வந்­த­தால் அந்­தப் பணிப்­பெண் 15 மாடி உய­ரத்­தி­லி­ருந்து பால்­கனி வழி­யாக இறங்­கித் தப்­பிக்­கும் நிலை ஏற்­பட்­டது. அந்த முத­லா­ளிக்­கு கிட்­டத்­தட்ட 10 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கூடு­தல் அம்­சங்­கள் சேர்க்­கப்­பட்­டுள்ள இந்த மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளு­டன் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளின் நலனை ஆத­ரிக்­கும் வகை­யில் மேலும் பல நடை­மு­றை­கள் சேர்க்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!