என்யுஎஸ்: பாலியல் நடத்தைக்காக மூவர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
0cf02ea8-3b10-4dc3-aaf0-25085288f2f0
-

ஆய்­வா­ள­ராகப் பணி­யாற்­றிய பள்ளி ஊழி­யர் ஒரு­வ­ரும் மாண­வர்­கள் இரு­வ­ரும் இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில் பாலி­யல் ரீதி­யான தவ­றான நடத்­தைக்­குப் பள்­ளி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டு­விட்­ட­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) அதன் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­திற்­கும் ஜூன் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் என்­யு­எ­சில் தவ­றான பாலி­யல் நடத்தை தொடர்­பில் கிடைத்த புகார்­கள் குறித்த விவ­ரங்­க­ளைக் கொண்­டி­ருந்­தது அறிக்கை. பாலி­யல் ரீதி­யாக தகாத வார்த்­தை­க­ளைப் பேசி­ய­தாக ஆய்­வா­ளர் மீது புகார் தரப்­பட்­டது. அத்­து­டன் இரண்டு மாண­வர்­க­ளுக்­குத் தகாத காணொ­ளி­க­ளை­யும் அனுப்பி அவ்­வி­ரு­வ­ரில் ஒரு­வரை அனு­மதி இன்­றித் தொட்­டும் இருந்­தார் அந்த ஆய்­வா­ளர். ஆய்­வா­ள­ரின் நடத்தை குறித்து கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்­கப்­பட்­ட­தாக என்­யு­எஸ் குறிப்­பிட்­டி­ருந்­தது. அத்­து­டன் போலி­சா­ருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. வெளி­யேற்­றப்­பட்ட மாண­வர்­களில் ஒரு­வர், இன்­னொரு மாண­வரை பாலி­யல் துன்­பு­றுத்­தல் செய்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

அனு­ம­தி­யின்றி ஒரு மாண­வ­ரைத் தொட்­டது, மற்­றொரு மாண­வரின் நிர்­வா­ண­க் காணொளியைப் பதி­விட்­டது ஆகிய புகார்­கள் தொடர்­பில் மற்­றொரு மாண­வர் வெளி­யேற்­றப்­பட்­டார்.

மாண­வர்­கள் தொடர்­பில் மேலும் எட்டு பாலி­யல் நடத்­தைச் சம்­ப­வங்­கள் உள்­ள­ன. இந்நிலையில், தவறு செய்­யும் மாண­வர்­க­ளுக்கு எதி­ராக புகார் அளிக்க மேலும் அதிக மாண­வர்­கள் முன்­வ­ரத் தொடங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.