காதைக் கடித்ததால் சிறைத் தண்டனை நீட்டிப்பு

காதைக் கடித்ததால் சிறைத் தண்டனை நீட்டிப்பு

2 mins read
5b50b91e-2ce1-4cd6-a0ce-e20715d7dfa2
சிறைச்சாலை வளாகம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு சண்டையின்போது சக கைதியின் காதைக் கடித்ததால் ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஆடவர் ஒருவரின் சிறைத் தண்டனை 10 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனது காது கடிக்கப்பட்டதால் 53 வயது லிம் லீ யாட்டின் முகம் சரிசெய்ய முடியாத நிலையில் உள்ளது. கடிக்கப்பட்ட அவரது காதின் பகுதியை மருத்துவர்களால் ஒட்டவைக்க முடியவில்லை.

காதைக் கடித்த தியோ சை லைக்கு, பல்வேறு குற்றங்களுக்காக 1998ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2016ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அவர் சிறையில் அடைக்கப்ட்டார்.

56 வயது சிங்கப்பூரரான தியோ, லிம்மைத் தாக்கியதை ஒப்புக்கொண்டார். அந்தக் குற்றத்திற்கு அவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகு தியோ இந்த தண்டனையை நிறைவேற்றுவார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதியன்று இவ்விருவரும் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்றனர். அதற்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாகத் துணை அரசு வழக்கறிஞர் கேப்ரியல் லிம் தெரிவித்தார்.

சண்டையில் தியோ, லிம்மின் காதைக் கடித்தார். சிறை அதிகாரி உத்தரவிட்ட பிறகு இருவரும் சண்டையிடுவதை நிறுத்தினர். கடிக்கப்பட்ட லிம்மின் காதுப் பகுதி தரையில் கிடந்தது.

அதற்குப் பிறகு மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்காக லிம் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களால் கடிக்கப்பட்ட அவரின்காதுப் பகுதியை மறுபடியும் ஒட்ட வைக்கமுடியவில்லை.

அவருக்குக் கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டது. தொடர்ந்து குற்றங்களைப் பரிந்துவருவதால் தியோவிற்கு 10லிருந்து 15 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையை விதிக்கக்கோரி துணை அரசு வழக்கறிஞர் இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்தக் குற்றத்திற்காக தியோவிற்கு அதிகபட்சமாக ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்