செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b2325dac-c319-4008-afb3-c3b6e497610b
-

பெரும் செல்வந்தராகியுள்ள சிங்கப்பூர் மருத்துவர்

சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவரான டாக்டர் லூ சூன் யோங் 'பில்லியனேர்' எனப்படும் பெரும் செல்வந்தராகியுள்ளார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தின் பங்கு விலையும் லாபமும் அதிகரித்தன.இந்த ஆண்டின் முற்பாதியில் அந்நிறுவனத்தின் வருவாய் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்தது.

ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம், சிங்கப்பூரில் 15 தடுப்பூசி போடும் நிலையங்களை நடத்திவருகிறது. சொகுசுக் கப்பல் பயணம் மேற்கொள்வோருக்கு கொவிட்-19 சோதனை நடத்துவதிலும் கைகொடுத்துவருகிறது. நாடு இப்படிப்பட்ட ஒரு சவாலை எதிர்நோக்கும்போது உதவிக்கரம் நீட்டுவது முக்கியம் என்றார் டாக்டர் லூ.

மீண்டுவந்தது செம்கார்ப்

இந்த ஆண்டு முற்பாதியில் 'செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் 46 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியுள்ளது.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 131 மில்லியன் வெள்ளியை இழந்தது. எரிசக்தி மற்றும் நகரக் கட்டமைப்புத் தீர்வுகளை வழங்கும் செம்கார்ப்பின் வர்த்தக விகிதம் 26 விழுக்காடு உயர்ந்தது. வர்த்தகத்தின் மதிப்பு 3.29 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வர்த்தகத்தின் மதிப்பு 2.61 பில்லியன் வெள்ளி.

செம்கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 2.03 வெள்ளியாக இருந்தது.

இரத்த நாள மறதிநோய் சிறப்பு கருத்தரங்கம்

சிங்­கப்­பூ­ரின் 56வது தேசிய தினத்தை முன்­னிட்டு சிங்கப்பூர் முஸ்­லிம் லீக் இரத்த நாள மறதிநோய் குறித்த விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. இன்­றைய காலச்­சூ­ழ­லில் பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­வ­ரும் நோய்­களில் டிமென்­ஷியா என்­கிற இரத்த நாள மறதி நோய் முதி­யோ­ருக்கு மட்­டு­மல்­லா­மல் நடுத்­தர வய­து­டை­யோ­ரை­யும் தாக்­கு­கிறது.

நாளை எட்­டாம் தேதி காலை 11 மணிக்கு ஸூம் மெய்­நி­கர் தளத்­தில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்ச்­சிக்கு சிங்­கப்­பூர் முஸ்­லிம் லீக்­கின் தலை­வ­ரும், மூத்த சமூக அடித்­த­ளத் தலை­வ­ரு­மான மு.ஜஹாங்­கீர் தலைமை தாங்­கு­கி­றார். இந்திய முஸ்­லிம் பேர­வை­யின் தலை­வர் திரு முஹம்­மது கெளஸ் முன்­னிலை வகிக்­கி­றார். ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஜாலான் புசார் நகர மன்ற தலை­வ­ரு­மான டாக்­டர் வான் ரிசால் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார். கருத்­த­ரங்­கில் டிமென்­ஷியா பற்றி ஆராய்ச்சி செய்து வரும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக இறு­தி­யாண்டு முனை­வர் கல்வி மாணவி குமாரி சர்­மிலி செல்­வ­ராஜி சிறப்­புரை வழங்­கு­வ­தோடு கேள்வி-பதில் அங்­கத்­தி­லும் பங்­கேற்­கி­றார். அனை­வ­ரும் இந்­நி­கழ்­வில் ஸூம் வழி கலந்­து­கொள்­ள­லாம். Meeting ID: 502 206 2546. Passcode: 080821

நிகழ்ச்சி குறித்த மேலும் விவ­ரம் வேண்­டு­வோர் நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர் திரு அ. முஹம்­மது பிலாலை 9853 4986 எண்­ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.