ஓட்டுநரை அடித்த வழக்கறிஞருக்கு சிறை

ஓட்டுநரை அடித்த வழக்கறிஞருக்கு சிறை

1 mins read
29f2c137-20aa-49c9-ab3e-0d61f34a4ef0
-

டாக்சி ஒட்டுநரைத் தாக்கிய வழக்கறிஞருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வழக்கறிஞரான 47 வயது சியெத்தன் குவோ, ஒருவரைத் தாக்கியது, தொந்தரவு செய்தது என இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவரை டாக்சி ஓட்டுநர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொள்ள மறுத்தார்.

தாக்கப்பட்ட ஓட்டுநர், பணியில் இருந்த அடுத்த ஓட்டுநரிடம் தான் ஓட்டிய டாக்சியை ஒப்படைக்க வேண்டியிருந்தது அதற்குக் காரணம்.