தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள 130 வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டங்களுக்கு வெப்பம் தணிக்கும் சாயம் பூசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களின் உள்ள வீடு
களின் வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் இலக்குடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு சிங்கப்பூரெங்கும் உள்ள வீவக கட்டடங்
களுக்கும் நடைபாதைகளுக்கும் வெப்பம் தணிக்கும் சாயம் பூசப்படும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கழகம் தெரிவித்தது.
வீவக பசுமை நகரங்கள் திட்டம் எனும் பத்தாண்டு திட்டத்தின்கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலைத்தன்மையுள்ள சுற்றுப்புறங்களைக் கொண்ட வீவக குடியிருப்புப் பேட்டைகளை உருவாக்க, திட்டம் இலக்கு கொண்டுள்ளது. வெப்பத்தைத் தணிப்பது, எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பது, மழைநீரை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் இலக்கை அடைய கழகம் முனைகிறது.
முதற்கட்டமாக தெம்பனிஸ் ஸ்திரீட் 83லும் 84லும் உள்ள 20 குடியிருப்புக் கட்டடங்களிலும் நடைபாதைகளிலும் பழுதுபார்ப்பு , மறு
வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வகையில் ஏலக்குத்தகையை தெம்பனிஸ் நகர மன்றம் நேற்று தொடங்கியது. ஏலக்குத்தகையில் கலந்துகொள்ள விரும்பும் நிறுவனங்கள் அடுத்த மாதம் 1ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் குடியிருப்புக் கட்டடங்
களுக்கும் நடைபாதைகளுக்கும் சாயம் பூசும் பணிகள் அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கான சாயம் பூசும் பணிகள் படிப்படியாக நடைபெறும். இந்த அறிமுகத் திட்டமும் அதுகுறித்த மறுஆய்வும் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

