தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தினம்: சடங்குபூர்வ அணிவகுப்பும் மற்ற கொண்டாட்டங்களும்

2 mins read
065cbef5-7374-4c68-b9df-4d4da20597de
-

எப்படி, எங்கு பார்க்கலாம் என்பன பற்றிய விவரங்கள்

காலை மணி 9 - 9.45

தேசிய தின அணி­வ­குப்பு வரும் 21ஆம் தேதிக்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், 600 பேர் நேரடி­யா­க­வும் 200 பேர் இணை­யம் வழி­யா­க­வும் பங்­கு­பெ­றும் சிறிய அள­வி­லான சடங்­கு­பூர்வ அணி­வகுப்பு மரினா பே மிதக்­கும் மேடை­யில் இன்று நடை­பெ­றும்.

NDPeeps ஃபேஸ்புக், யூடி­யூப் கணக்­கு­கள் வழி­யாக அந்த அணி­வ­குப்­பைக் காண­லாம்.

காலை 9.50 மணி முதல் 10.35 வரை, தலா இரு ஏஎச்-அப்­பாச்சி ஹெலி­காப்­டர்­கள் புடை­சூழ, இரண்டு சினூக் ஹெலி­காப்­டர்­கள் ஆயி­ரம் அடி உய­ரத்­தில் தேசிய கொடி­யைப் பறக்­க­விட்­ட­படி இரு வழித்­த­டங்­களில் பறக்­கும்.

கிழக்­குத் தடம்: ஈஸ்ட் கோஸ்ட், சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், பொங்­கோல், காத்­திப்

மேற்­குத் தடம்: வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங், புக்­கிட் பாஞ்­சாங், புக்­கிட் தீமா, சுவா சூ காங்.

அதே வேளை­யில், ஆறு எஃப்-15எஸ்ஜி போர் விமா­னங்­கள் 1,500 அடி உய­ரத்­தில் மணிக்கு 600 கி.மீ. வேகத்­தில் வானில் பறக்­கும். காலை 9.50 மணிக்­குத் தொடங்­கும் இந்­தச் சாகச நிகழ்வு கிட்­டத்­தட்ட அரை­மணி நேரம் நீடிக்­கும்.

தோ பாயோ, அங் மோ கியோ, இயோ சூ காங், ஈசூன், உட்­லண்ட்ஸ், சுவா சூ காங், புக்­கிட் தீமா, ஜூரோங், கிள­மெண்டி, குவீன்ஸ்­டவுன், தியாங் பாரு, ஈஸ்ட் கோஸ்ட், பிடோக், தெம்­பனிஸ், பாசிர் ரிஸ், பொங்­கோல், ஹவ்­காங், கேலாங் ஆகிய பகுதி­களுக்கு மேலே அவை பறக்­கும்.

பிற்பகல் மணி 1 - 7

ஜூ கூனில் உள்ள சிங்­கப்­பூர் டிஸ்­க­வரி சென்­ட­ரில் குடும்­பத்­திற்கு உகந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும். மேல்விவ­ரங்­க­ளுக்கு https://www.sdc.com.sg/nd21 என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

இரவு மணி 8 - 9

ஷபீர் உள்ளிட்ட உள்­ளூர்க் கலை­ஞர்­கள் பங்­கு­பெ­றும் ஒரு மணி நேர தேசிய தின இசைக் கச்­சே­ரி இடம்பெறும். ஒளி­வழி 5லும் 'meWatch'லும் இதைக் காணலாம்.

இரவு மணி 7.30 - நள்ளிரவு

இம்­மா­தம் முழு­தும் இரவு 7.30 மணி முதல் நள்­ளி­ரவு வரை மத்­திய தீய­ணைப்பு நிலை­யம், குட் ஷெப்­பர்ட் தேவா­ல­யம், சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கம், அப்­ஜெக்­டி­ஃப்ஸ் சென்­டர், தேசிய வடி­வமைப்பு மையம், ஸ்டாம்­ஃபர்ட் கலை­கள் மையம், தி கெத்தே ஆகிய ஏழு கட்­ட­டங்­கள் சிவப்பு-வெள்­ளை­யில் ஒளி­யூட்­டப்­படும்.