பீட்டர் சியாவுக்கு உயரிய விருது

3 mins read
a3551ab1-ca8d-44aa-8961-fe554defb387
-
multi-img1 of 3

வீ. பழ­னிச்­சாமி

இணை ஆசி­ரி­யர்

இவ்­வாண்­டுக்­கான தேசிய தின விரு­துப் பட்­டி­ய­லில் முதல் இடத்­தைப் பெறு­கி­றார் டிபி­எஸ் வங்­கிக் குழு­மம், லாசால் கலைக் கல்­லூரி, தேசிய சம்­பள மன்­றம், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் ஆகி­ய­வற்­றின் தலை­வரும் அதி­பர் ஆலோ­சனை மன்­றத்­தின் உறுப்­பி­ன­ரு­மான 74 வயது திரு பீட்­டர் சியா லிம் ஹுவாட்.

திரு சியா­வுக்கு நாட்­டின் உய­ரிய 'நீல உத்­தமா' (உச்ச தகுதி) விருது வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த நிலை­யில் மேன்­மை­தங்­கிய சேவை விருது பெறு­கின்­றனர் தேசிய பூங்­காக் கழ­கத்­தின் தலை­வர் திரு பென்னி லிம் சியாங் ஹோ, பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத்­தின் தலை­வர் திரு ரிச்­சர்ட் மெக்­னஸ் ஆகி­யோர்.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற மாதர்­களில் ஒரு­வ­ரா­கக் கௌர­விக்­கப்­பட்ட பாஸ்­கர் கலைக் கழ­கத்­தின் கலை இயக்­கு­ந­ரும் சிங்­கப்­பூ­ரின் பழம்­பெ­ரும் கலை­ஞர்­களில் ஒரு­வரு­மான 81 வயது திரு­மதி சாந்தா பாஸ்­க­ருக்கு மெச்­சத்­தக்க சேவைப் பதக்­கம் வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யில் தற்­காப்­புப் படைத் தலை­வ­ரான 46 வயது லெஃப்டி­னென்ட் ஜென­ரல் மெல்­வின் ஓங், ராணு­வத்­துக்­கான மெச்­சத்­தக்க சேவைப் பதக்­கத்­தைப் பெறு­கி­றார்.

அறி­விக்­கப்­பட்­டுள்ள தேசிய தின விருது பற்றி கருத்­து­ரைத்த திரு­மதி சாந்தா பாஸ்­கர், "இந்த இக்­கட்­டான சூழ்­நி­லை­யில், இந்த விருது கிடைத்­தி­ருப்­பது, பாரம்­பரிய கலை­க­ளுக்கு, குறிப்­பாக நட­னத்­துக்கு சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­ப­டு­வ­தைக் காட்­டு­கிறது," என்­றார்.

சிங்­கப்­பூ­ரின் கலா­சா­ரப் பதக்­கத்தை 1990ஆம் ஆண்­டில் பெற்ற திரு­மதி சாந்­தா­வுக்கு, 2016ல் பொதுச் சேவை நட்­சத்­தி­ரப் பதக்­கம் வழங்­கப்­பட்­டது.

தெம்­ப­னிஸ் சென்ட்­ரல் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு­வின் துணைத் தலை­வர் திரு ஜி. சேகர், பொங்­கோல் வெஸ்ட் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு­வின் துணைத் தலை­வர் திரு ஹாஜா நிஜா­மு­தீன், மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­யின் துணைத் தலை­வர் திரு­வாட்டி என். குமாரி தேவி, மேக்ஸ்­வெல் சேம்­பர்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு பிலிப் ஆண்­டனி ஜெய­ரத்­னம் ஆகி­யோர் பொதுச் சேவை நட்­சத்­தி­ரப் பதக்­கம் பெறு­ப­வர்­களில் சிலர்.

"தன்­ன­ல­மற்று அய­ராது சமூ­கத்­திற்­குச் சேவை­யாற்­றி­டும், சிங்­கப்­பூரை சிறந்த இட­மாக உரு­வாக்­கிட தொடர்ந்து பாடு­படும் அனை­வருக்­கும் இந்த விருது ஓர் ஊக்­க­மாய் இருக்­கும் என நம்­பு­கி­றேன்," என்­றார் திரு நிஜா­மு­தீன்.

தமக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் பொது நிர்­வாக வெண்­க­லப் பதக்­கம் பற்றி பேசிய உம­றுப்­பு­ல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தின் இயக்­கு­நர் திரு­வாட்டி சாந்தி செல்­லப்­பன், "சுமார் 30 ஆண்­டு­க­ளா­கக் கல்­வித்­து­றை­யில் பணி­யாற்­றி­வ­ரும் எனக்கு உற்ற துணை­யாக இருந்து எனது பணி­யைச் சிறப்­பா­கச் செய்­வ­தற்கு ஆத­ரவு நல்­கிய அனைத்து நல் உள்­ளங்­க­ளுக்­கும் என்­னு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இவ்­வி­ரு­தைச் சமர்ப்­பிக்­கி­றேன்," என்­றார்.

தேசிய கல்­விக் கழ­கத்­தில் மூத்த கற்­பித்­தல் ஆய்­வா­ள­ரான திரு­வாட்டி குண­வதி நல்­ல­தம்­பிக்­கும் பொது நிர்­வாக வெண்­க­லப் பதக்­கம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது குறித்து கருத்­து­ரைத்த திரு­வாட்டி குண­வதி, "இது எனக்கு கிடைக்­கும் இரண்­டா­வது தேசிய தின விருது. 2001ல் எனக்கு பாராட்­டுப் பதக்­கம் கிடைத்­தது. வாழ்­நாள் கல்­வி­யும் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ளும் பண்­பும் எனக்கு கைகொ­டுத்­துள்­ளது. மாண­வர்­களுக்கு ஒரு நல்ல வழி­காட்­டி­யாக தொடர்ந்து சேவை­யாற்­று­வேன்," என்­றார்.

தேசிய தின விருதை மொத்­தம் 5,710 பேர் பெறு­கின்­ற­னர். அவர்­களில் 702 பேர் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யைச் சேர்ந்­த­வர்­கள். செயல்­தி­றன் விருது பெறும் 871 பேர், நீண்­ட­கால சேவை விருது பெறும் 3,241 பேர் தவிர்த்த விருது பட்டி­ய­லில், 85 பேர் இந்­தி­யர்­கள்.