‘சிங்கப்பூரின் கிறிஸ்டஃபர் நோலன் ஆவது இலக்கு’

இந்து இளங்­கோ­வன்

பார்க்­கும் ஒவ்­வொரு திரைப்­ப­ட­மும் 33 வயது செ. விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஒரு பாடம். எந்­தத் திரைப் படத்­தைப் பார்த்­தா­லும் அதன் திரைக்­கதை, ஒளிப்­ப­திவு போன்­ற­வற்றை பகுத்­தாய்ந்து தமது எண்­ணங்­க­ளைக் குறிப்பு எடுத்­துக்­கொள்­வார் குறும்­பட இயக்­கு­ந­ரான விக்­னேஸ்.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் முழு­மூச்­சா­க­வும் முறை­யான பயிற்சி பெற்­றும் குறும்­பட/திரைப்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்­கும் இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கிறது. அவர்­களில் வின்­கே­சும் ஒரு­வர்.

கடந்த மாதம் நடை­பெற்ற 7வது தேசிய இளை­யர் திரைப்­பட விருது விழா­வில் 'டார்க் லைட்' என்­னும் இவ­ரது படத்­திற்­காக இவ­ருக்கு சிறந்த இயக்­கு­நர் விருது வழங்­கப்­பட்­டது.

குறும்­ப­டத்­தின் இயக்­கு­நரும் நிர்­வாகத் தயா­ரிப்­பா­ள­ருமான விக்­னேஸ், படத்­த­யா­ரிப்­புக்­குச் செல­வான $15,000 தொகையை ஏறத்­தாழ ஓராண்டு காலம் 'கிராப்' வாட­கைக் கார் ஓட்டி, சிறிது சிறி­தா­கச் சேமித்­தார்.

தமது முது­நிலை பட்­டப் படிப்­பிற்­கான நிதி­யை­யும் விக்­னேஸ் 'கிராப்' வாடகை கார் ஓட்­டி­தான் சம்­பா­தித்­தார்.

ஊட­கத் துறை­யில் தடம் பதிக்­க­வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன்­சிங்­கப்­பூ­ரின் திரைப்­ப­டத்­து­றை­யில் இள­நி­லைப் பட்­டம் பெற்­றார் விக்­னேஸ்.

படிப்பை முடித்த பின்­னர் அவர் எடுத்த 'புளு பப்­பெட்­டி­யர்' என்­னும் குறும்­ப­டம், மேன்­ஹாட்­டன் திரைப்­பட விழா­விற்கு தகுதி பெற்­றது. நியூ­யார்க்­கில் நடந்த விழா­வின் படத் திரை­யி­ட­லுக்கு சென்­றி­ருந்த விக்­னேஸ், பிற­நாட்­டுப் படங்­க­ளின் தரத்­தைக் கண்டு வியந்­து­போ­னார்.

படத் தயா­ரிப்­பைப் பற்­றிக் கற்­றுக்­கொள்ள இன்­னும் அதி­கம் உள்­ளது என்­பதை உணர்ந்த அவர், தமது அறிவை விரி­வாக்­கிக் கொள்ள ஊட­கத் துறை­யில் சிறு சிறு வேலை­க­ளைச் செய்­தார்.

பிறகு, லண்­ட­னுக்­குச் சென்று பட இயக்­கத்­தில் முது­நி­லைப் பட்­டக் கல்­வியை மேற்­கொண்­டார். அதன்­பின்­னர் 'புளு பப்­பப்­டி­யர்' குறும்­ப­டத்தை 'பப்­பப்­டி­யர்' என்­னும் பெய­ரில் மறு ஆக்­கம் செய்­தார். இப்­ப­டம் பல திரைப்­பட விழாக்­களில் 39க்கும் மேற்­பட்ட நிய­ம­னங்­க­ளைப் பெற்று, ஆறு விரு­து­களை வென்­றது.

பார்க்­கும் அனு­ப­வங்­க­ளை­யும் தூக்­கத்­தில் காணும் கன­வு­க­ளை­யும் மைய­மா­கக்­கொண்டு, படங்­க­ளுக்­கான கதை­யைச் செதுக்­கும் விக்­னே­சிற்கு பிர­பல ஹாலி­வுட் திரைப்­பட இயக்­கு­னர் கிறிஸ்­ட­ஃபர் நோல­னின் படங்­கள் என்­றால் கொள்­ளைப் பிரி­யம். தாமும் சிந்­த­னை­க­ளைத் தூண்­டும் சுவா­ர­சி­ய­மான படங்­களை எடுத்து சிங்­கப்­பூ­ரின் கிறிஸ்­ட­ஃபர் நோல­னாக வேண்­டும் என்­பது இவரி ஆசை.

கலைஞர்கள் வளர உதவி தேவை

சொந்த முயற்­சி­யில் ஒரு படம் எடுப்­பது, அது­வும் சிங்­கப்­பூ­ரில் எடுத்து வெளி­யி­டு­வது சுல­ப­மல்ல,

"'டார்க் லைட்' குறும்­ப­டத்­தில் 'long take' என்று அழைக்­கப்­படும் நீள்­காட்சி ஒளிப்­ப­திவு உத்­தியை பயன்­ப­டுத்­தி­யுள்­ளோம். இந்­தக் காட்­சியை எடுக்க பல­முறை ஒத்­திகை செய்ய வேண்­டி­யி­ருந்­தது. ஒவ்­வொரு வார இறு­தி­யி­லும் படக்­கு­ழு­வு­டன் காட்சி எடுக்­கப்­பட்ட இடத்­திற்கு சென்று ஒத்­திகை பார்த்­தோம். படப்­பி­டிப்பு நாளன்று 10 முறை முயற்சி செய்­த­பின் 11ஆம் முறை பதி­வான காட்சி திருப்­தி­கா­ர­மாக அமைந்­தது. ஒரே இலக்­குள்­ள­வர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும்­போது சிர­மம் அவ்­வ­ள­வாக தெரி­வ­தில்லை," என்­றார், அடுத்த படத்­திற்­கான ஆயத்த வேலை­களில் மும்­மு­ர­மாக இருக்­கும் இந்த இளை­யர்.

"தற்­போ­து­வ­ரை­யில் சொந்த செல­வில்­தான் படங்­க­ளைத் தயா­ரித்து வரு­கி­றேன். இது நீண்ட காலத்­துக்­குத் தாக்­குப்­பி­டிக்­கக்­கூ­ட­தல்ல. என்­னைப் போன்ற படைப்­பா­ளி­கள் நிதி ­பெற கூடு­தல் வழி­கள் உரு­வாக்­கப்­பட வேண்­டும்," என்று பரிந்­து­ரைத்­தார் விக்­னேஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!