தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றுமையில் உயர்வோம்; வெற்றியே காண்போம்

1 mins read
164dc9c1-3d15-4ba3-9bba-b1888d5a75c0
சிறிய தேசமாக சவால்களை எதிர்கொண்டாலும் அதனை ஒன்று சேர்ந்த மக்களாக எதிர்கொண்டு வெற்றி காண்போம் என பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். மரினா பே மிதக்கும் தளமேடையில் தேசிய தின அணிகுப்பைக் காண வந்தோரை வாழ்த்தினார் அவர். -
multi-img1 of 2

ஒன்­று­பட்ட மக்­க­ளாக சவால்­களை முறி­ய­டித்து வெற்றி காண்­போம் என பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். சிங்­கப்­பூ­ரின் 56வது தேசிய தினத்­தை­யொட்டி நேற்­றுக் காலை நடை­பெற்ற அணி­வ­குப்பு குறித்து அவர் தமது ஃபேஸ்புக்­கில் கருத்­து­க­ளைப் பகிர்ந்­துள்­ளார்.

அவர் தமது பதி­வில், "வழக்­க­மாக உற்­சா­கத்­தில் ஆர்ப்­ப­ரிக்­கும் தேசிய தின அணி­வ­குப்­பி­லி­ருந்து இவ்­வாண்­டின் அணி­வ­குப்பு வேறு­பட்­டி­ருந்­தா­லும் ராணுவ வீரர்­க­ளின் அணிவ­குப்­பும் வானில் தேசிய கொடி நம்­மைக் கடந்­து­சென்ற கம்­பீ­ர­மும் எஃப்-15 போர் விமா­னங்­

க­ளின் இடி­மு­ழக்க வீர வணக்­க­மும் நம்மை பிரம்­மிப்­பில் ஆழ்த்­தின," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மேலும், "சடங்­கு­பூர்வ அணி­

வ­குப்­பைக் காண மரினா பே மிதக்­கும் மேடைக்கு நேரில் வந்­தோ­ரும் வீட்­டில் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தோ­ரும் இவற்­றைக் கண்டு பர­வ­ச

­ம­டைந்­தி­ருப்­பர்.

"நேரில் வந்­தோ­ரில் கொவிட்-19 முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் அத்­தி­யா­வ­சிய ஊழி­யர்­களும் அடங்­கு­வர்.

"சிங்­கப்­பூ­ருக்கு வீர­வ­ணக்­கம் செலுத்த தேசிய கொடி­யு­டன் பறந்து சென்ற சினூக் ஹெல்­காப்­டர்­களை தீவு முழு­வ­தும் உள்ள மக்­கள் கண்­டும் அவற்­றின் ஓசை­யைக் கேட்­டும் மகிழ்ந்­தி­ருப்­பர்.

"சிறிய தேச­மாக சிங்­கப்­பூர் இவ்­வாண்டு சவால்­களை எதிர்­கொண்­ட­போ­தி­லும் ஒன்­றி­ணைந்த மக்­க­ளாக அவற்றை முறி­யடித்து வெற்­றி­காண்­போம்; எப்­போ­தும் அத­னையே தொட­ரு­வோம்," என்று தெரி­வித்த பிர­த­மர், சிங்­கப்­பூ­ருக்­குப் பிறந்த நாள் வாழ்த்­துத் தெரி­விக்­கும் வாச­கங்­க­ளை­யும் கருத்து­ க­ளை­யும் தம்­மு­டன் பகிர்ந்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.