அண்ணன் வழியில் தம்பி

1 mins read
35732549-0caa-4205-9124-87887f0b2428
-

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக தமது அண்­ணன் அணி­வ­குத்­துச் சென்ற அதே அணியில் நேற்று பங்­கு­பெற்ற தேசிய சேவை­யா­ளர் கார்ப்­ப­ரல் உத­ய­நிதி சிதம்­ப­ரம், வாழ்­நா­ளில் இதை மறக்க முடியாது என்றார்

'மகிழ்ச்சி வேட்டு முழக்கம்' என்ற அங்­கம் புதி­தாக இருந்­த­தா­கக் கூறிய உதயா, இதனைத் தாமும் தமது குழு­வி­ன­ரும் கவ­ன­மாகப் பயிற்சி செய்து கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

2015ஆம் ஆண்­டின்­போது பொன்­விழா தேசிய தின அணி­வ­குப்­பில் தமது அண்­ணன் கலந்­து­கொண்­ட­தைப் பற்றி பகிர்ந்த உத­ய­நிதி, அவ­ரி­ட­மி­ருந்து சில திறன்­க­ளைக் கற்றுக்­ கொண்­ட­தா­கச் சொன்னார். "நேர வரம்­புக்­குள் அணி­வ­குத்­தல், சரி­யான கை அசை­வு­கள் போன்­ற­வற்­றுக்­கான சில உத்­தி­களைக் கற்­றுக்­கொண்­டேன்," என்றாரவர்.

பல மணி நேரம் நீடித்த ஒத்­தி­கை­க­ளின்­போது சாப்­பி­டும் நேரத்­தைத் தவிர மற்ற எல்லா நேரங்­க­ளி­லும் முகக் கவசம் அணிந்­தி­ருக்க வேண்­டும். அத்­து­டன், சிறு குழுக்­க­ளு­டன்தான் உற­வா­ட­ வேண்டும் போன்ற கட்­டுப்­பா­டு­கள் இருந்­த­தாக உத­ய­நிதி கூறி­னர்.

"சுகா­தார பாது­காப்பு குறித்து என் பெற்­றோர்­ தொடக்­கத்­தில் கவலை கொண்டனர். ஆயி­னும், ஒத்­தி­கை­க­ளின்­போது எடுக்­கப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைப் பற்­றி விளக்­கி­ய­போது அவர்­களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது," என்றார் அவர்.