பருவநிலை மாற்றம்; பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக வேண்டும்

2 mins read
cb57f399-697d-4c53-86ab-0a8c18120c0b
-

பரு­வ­நிலை மாற்­றத்­தால் சிங்­கப்­பூ­ருக்கு பெரிய அள­வில் பாதிப்­பு­கள் ஏற்­படும் வாய்ப்­பு­கள் உள்­ளன. இத­னால் சிர­ம­மான காலக்­கட்­டத்தை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தயா­ராக இருக்க வேண்­டும் என்று நேற்று வெளி­யான அறிக்கை ஒன்று எச்­ச­ரித்­தது.

பூமி தொடர்ந்து வெப்­ப­ம­டை வதால் சுட்­டெ­ரிக்­கும் அனல் காற்று, கட­லோ­ரங்­களில் நிக­ழும் மோச­மான வெள்­ளம், கன­மழை ஆகி­ய­வற்­றால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­படும்.

"மனி­தர்­க­ளால் நக­ரங்­களில் வெப்­பம் அதிகரிக்கும். நக­ர­ம­ய­மாக்­க­லால் அனல்­காற்று மேலும் அதி­க­ரிக்­கும்," என்று ஐபி­பிசி எனும் அர­சாங்­கங்­க­ளுக்கு இடை­யி­லான பரு­வ­நிலை மாற்­றம் குறித்த குழு குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூர் ஏற்­கெ­னவே உல­க­ளா­விய சரா­சரி அள­வை­விட கூடு­த­லான வெப்­பத்தை அனு­ப­வித்து வரு­கிறது. தற்­போ­தைய நகர்ப்­புற கட்­ட­மைப்­பு­கள் பக­லில் வெப்­பத்தை உள்­ளி­ழுத்து இர­வில் வெளி­யி­டு­வதே இதற்கு கார­ண­மா­கும்.

1948ல் இருந்­த­தை­விட உள்­ளூ­ரின் வெப்­ப­நிலை 1.8 டிகிரி செல்­சி­ய­சுக்கு அதி­க­ரித்­துள்­ளதை சிங்­கப்­பூர் தேசிய சுற்­றுப்­புற வாரியத்தின் வானிலை ஆய்வு நிலை­யத் தர­வு­கள் காட்­டு­கின்­றன.

அதே சம­யத்­தில் உல­க­ளா­விய வெப்­பம் 1.1 டிகிரி செல்­சி­யஸ் மட்­டுமே கூடி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலை­யத்­தின் கீழ் செயல்­படும் சிங்­கப்­பூர் பரு­வ­நிலை மாற்ற ஆய்வு நிலை­யம் வெளி­யிட்ட அண்­மைய அறிக்­கை­யி­லும் வரப்­போ­கும் ஆண்டுகளில் அதிக வெப்­பத்தை உணர முடி­யும் என்று சுட்­டிக்­காட்டப் பட்டுள்ளது.

சிங்­கப்­பூர், நகரை குளிர்ச்­சி­யாக வைத்­தி­ருக்க பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. நகர்ப்­பு­றங்­களில் அதிக மரங்­கள் நடப்­பட்டு வரு­கின்­றன.

முன்­னோ­டித் திட்­ட­மாக தெம்­ப­னி­சில் உள்ள 130க்கும் மேற்­பட்ட பொது வீட­மைப்பு புளோக்­கு­களில் வெப்­பத்தை பிரதிபலிக்கும் வண்­ணப்­பூச்சு பூசப்­பட்டு வரு­கிறது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கத்­தின் நகர்ப்­புற பரு­வ­நிலை மாற்ற விளை­வு­களை ஆரா­யும் நிபு­ண­ரான வின்ஸ்­டன் சோவ், சிங்­கப்­பூ­ரில் 35 டிகிரி செல்­சி­ய­சுக்கு அதி­க­மான வெப்­பத்­தால் ஈரப்­ப­த­மான சுற்­றுச்­சூ­ழல் அசௌ­கரி யத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றார்.

திரு சோவ், ஐபி­பிசி அறிக்­கைக்கு தொடர்ந்து பங்­காற்றி வரு­ப­வர்.

ஈரப்­ப­தம், வெப்­பத்­தி­னால் ஏற்­படும் அசௌ­க­ரி­யத்தை மேலும் மோச­மாக்­கும் என்று அவர் சொன்­னார்.

மனி­தர்­கள் குளிர்­சா­தன வசதி களால் வெப்­ப­மான சூழ­லைச் சமா­ளிக்க முடி­யும்.

இருந்­தா­லும் மரங்­கள், விலங்கு­ க­ளுக்கு அத்­த­கைய வாய்ப்­பு­கள் இல்லை.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் உயர்ந்து­வ­ரும் கடல் மட்­டம் மற்­றொரு கவ­லைக்­கு­ரிய அம்­ச­மாக உள்­ளது.

உல­கம் வெப்­ப­ம­டை­வ­தால் பனிப்­பா­றை­கள் உருகி கடல் நீர் மட்­டத்தை அதி­க­ரிக்­கச் செய்­யும்.

கடந்த காலங்­களில் நூற்­றாண்­டுக்கு ஒரு­முறை நிகழ்ந்த கடல் மட்ட உயர்வு, 2,100 இடங்­களில் குைறந்­தது ஆண்­டுக்கு ஒரு முறை உயர வாய்ப்பு உள்­ளது என்று ஐபி­பிசி அறிக்கை தெரி­வித்­தது.