பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சிரமமான காலக்கட்டத்தை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று நேற்று வெளியான அறிக்கை ஒன்று எச்சரித்தது.
பூமி தொடர்ந்து வெப்பமடை வதால் சுட்டெரிக்கும் அனல் காற்று, கடலோரங்களில் நிகழும் மோசமான வெள்ளம், கனமழை ஆகியவற்றால் சிங்கப்பூர் பாதிக்கப்படும்.
"மனிதர்களால் நகரங்களில் வெப்பம் அதிகரிக்கும். நகரமயமாக்கலால் அனல்காற்று மேலும் அதிகரிக்கும்," என்று ஐபிபிசி எனும் அரசாங்கங்களுக்கு இடையிலான பருவநிலை மாற்றம் குறித்த குழு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் ஏற்கெனவே உலகளாவிய சராசரி அளவைவிட கூடுதலான வெப்பத்தை அனுபவித்து வருகிறது. தற்போதைய நகர்ப்புற கட்டமைப்புகள் பகலில் வெப்பத்தை உள்ளிழுத்து இரவில் வெளியிடுவதே இதற்கு காரணமாகும்.
1948ல் இருந்ததைவிட உள்ளூரின் வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியசுக்கு அதிகரித்துள்ளதை சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு நிலையத் தரவுகள் காட்டுகின்றன.
அதே சமயத்தில் உலகளாவிய வெப்பம் 1.1 டிகிரி செல்சியஸ் மட்டுமே கூடியுள்ளது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையத்தின் கீழ் செயல்படும் சிங்கப்பூர் பருவநிலை மாற்ற ஆய்வு நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையிலும் வரப்போகும் ஆண்டுகளில் அதிக வெப்பத்தை உணர முடியும் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
சிங்கப்பூர், நகரை குளிர்ச்சியாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் அதிக மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
முன்னோடித் திட்டமாக தெம்பனிசில் உள்ள 130க்கும் மேற்பட்ட பொது வீடமைப்பு புளோக்குகளில் வெப்பத்தை பிரதிபலிக்கும் வண்ணப்பூச்சு பூசப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் நகர்ப்புற பருவநிலை மாற்ற விளைவுகளை ஆராயும் நிபுணரான வின்ஸ்டன் சோவ், சிங்கப்பூரில் 35 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பத்தால் ஈரப்பதமான சுற்றுச்சூழல் அசௌகரி யத்தை ஏற்படுத்தும் என்றார்.
திரு சோவ், ஐபிபிசி அறிக்கைக்கு தொடர்ந்து பங்காற்றி வருபவர்.
ஈரப்பதம், வெப்பத்தினால் ஏற்படும் அசௌகரியத்தை மேலும் மோசமாக்கும் என்று அவர் சொன்னார்.
மனிதர்கள் குளிர்சாதன வசதி களால் வெப்பமான சூழலைச் சமாளிக்க முடியும்.
இருந்தாலும் மரங்கள், விலங்கு களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை.
பருவநிலை மாற்றத்தால் உயர்ந்துவரும் கடல் மட்டம் மற்றொரு கவலைக்குரிய அம்சமாக உள்ளது.
உலகம் வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த கடல் மட்ட உயர்வு, 2,100 இடங்களில் குைறந்தது ஆண்டுக்கு ஒரு முறை உயர வாய்ப்பு உள்ளது என்று ஐபிபிசி அறிக்கை தெரிவித்தது.

