ஜூலை மாதம் வீவக வீடு களின் வாடகை கூடிய நிலை யில் தனியார் அடுக்கு வீடு களின் வாடகை நிலவரம் அதற்கு முந்திய மாதத்தைப் போலவே மாற்றமின்றி தொடர்ந்தது.
அதேநேரம் கடந்த மாதம் அதிகமான தனியார் கூட்டு ரிமை வீடுகளும் வீவக வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டதாக எஸ்ஆர்எக்ஸ் என்னும் சொந்துச் சந்தை நிறுவனத்தின் முன்னோடி மதிப்
பீடுகள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து ஆறு மாதங் களாக அதிகரித்து வந்த கூட்டுரிமை விடுகளின் வாடகை, கடந்த மாதத்தில் மாறவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட இந்த ஜூலை யில் வாடகை 7.6% ஏற்றம் கண்டது.
இருப்பினும் ஆக உச்சத்தைத் தொட்ட 2013 ஜனவரி நிலவரத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட 10.9 விழுக்காடு குறைவு.
தனியார் வீடுகளுக்கான வாடகை நிலவரம் இவ்வாறு இருக்க, வீவக வீடுகளுக் கான வாடகை கடந்த மாதம் வரை 13 மாதங்கள் தொடர்ந்து ஏறியது. ஜூன் மாதத்தைவிட 0.6 விழுக்காடு உயர்ந்தது. அேதபோல ஆண் டுக்காண்டு அடிப்படையில் கடந்த மாதம் 8.4% கூடியது.

