பாதிக்கும் மேற்பட்ட புதிய பிடிஓ வீடுகள் முதிர்ச்சிப் பேட்டைகளில் அமையும்

பாதிக்கும் மேற்பட்ட புதிய பிடிஓ வீடுகள் முதிர்ச்சிப் பேட்டைகளில் அமையும்

2 mins read
af9d8976-4f8c-44d2-b585-9360dd19aa87
-

இம்­மா­தம் விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்ள 4,989 பிடிஓ வீடு­களில் பாதிக்கு மேற்­பட்­டவை முதிர்ச்­சி­யான பேட்­டை­க­ளைச் சேர்ந்­தவை. இதற்கு முன்­னர் பிப்­ர­வரி, மே மாதங்­களில் தொடங்­கப்­பட்ட பிடிஓ விற்­பனை நட­வ­டிக்­கை­களில் பல வீடு­கள் முதிர்ச்­சி­யற்ற வட்­டா­ரங்­களில் இடம்­பெற்று இருந்­தன. தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள நான்கு பிடிஓ திட்­டங்­களில் 3,085 வீடு­கள் குவீன்ஸ்­ட­வுன், காலாங்/வாம்போ, தெம்­ப­னிஸ் வட்­டா­ரங்­க­ளுக்கு உரி­யவை.

எஞ்­சிய 1,904 வீடு­கள் ஜூரோங் ஈஸ்ட், ஹவ்­காங் ஆகிய முதிர்ச்­சி­யற்ற பேட்­டை­களில் உள்­ளன. இருப்­பி­னும் இனி­மேல் வரும் நவம்­பர் மாதம் தொடங்­கப்­பட உள்ள பிடிஓ திட்­டங்­களில் ஒரே ஒரு திட்­டம் மட்­டுமே முதிர்ச்­சி­யான பேட்­டை­யில் அமை­யும் என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

காலாங்/வாம்போ முதிர்ச்சி பேட்­டை­யில் 430 ஈரறை ஃபிளக்ஸி மற்­றும் நான்­கறை வீடு­களை, வாங்­கு­வோர் எதிர்­பார்க்­க­லாம். அதே­நே­ரம் 3,000 வீடு­களில் சில சுவா சூ காங், ஹவ்­காங், ஜூரோங் ஈஸ்ட் மற்­றும் தெங்கா போன்ற முதிர்ச்­சி­யற்ற வட்­டா­ரங்­களில் இடம்­பெ­றும். இந்­தத் திட்­டங்­கள் இன்­னும் மறு­ஆய்­வில் இருப்­ப­தால் விரை­வில் அதிக விவ­ரங்­கள் அறி­விக்­கப்­படும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது. தேவை­க­ளைச் சமா­ளிக்­கும் வித­மாக அதி­க­மான புதிய வீடு­களை முதிச்­சிப் பேட்­டை­களில் கட்­ட­வேண்­டிய அவ­சி­யம் இருப்­ப­தாக இதற்கு முன்­னர் கழ­கம் கூறி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில், பொது­வா­கவே முதிர்ச்சி வட்­டார வீடு­கள் மிக­வும் பிர­ப­லம் என்­ப­தால் தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­கள் மூலம் பல­ருக்­கும் அப்­ப­கு­தி­களில் வீடு­க­ளைப் பெறு­வ­தற்கு அதிக வாய்ப்­பு­கள் கிட்­டும் என்று ப்ராப்­நெக்ஸ் சொத்து நிறு­வ­ன தலைமை நிர்­வாகி இஸ்­மா­யில் கஃபூர் கூறி­னார்.