பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய தனித்தனிச் சம்பவங்களில் மூன்று ஆடவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருவதாக தேசிய
சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
36 வயது ஆடவர் ஒருவர் நியூட்டன் உணவு நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி அமலாக்க பெண் அதிகாரியிடம் கொச்சை வார்த்தை
களைப் பயன்படுத்தினார்.
இரவு 10.30 மணிக்கு மேல் அவரும் அவரது மூன்று நண்பர்களும் மது அருந்துவதை நிறுத்துவதற்கான ஆலோசனையை வழங்க அந்த அதிகாரி சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
அடுத்த சம்பவமும் அதே இடத்தில் அதே நாளில் நடைபெற்றது. 41 வயது ஆடவரும் அவரது ஐந்து நண்பர்களும் ஒன்றாகக் கூடியிருந்ததைக் கண்ட அதிகாரி அவர்களைப் பிரிந்து செல்லுமாறு கூறச் சென்றபோது அவரை நோக்கி அந்த ஆடவர் வசைமொழியைப் பயன்படுத்தினார். மூன்றாவது சம்பவம் ஹேக் ரோடு சந்தையில் ஜூலை 21ஆம் தேதி நிகழ்ந்தது.

