செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
98680040-4ae1-402b-9510-37ede2748a3c
-
Google News Preferred Icon

சொத்துச் சந்தை முதலீட்டுக்கு தலைசிறந்த இடம் சிங்கப்பூர்

சிங்­கப்­பூர் சொத்­துச் சந்­தை­யின் முத­லீட்டு நட­வ­டிக்கை இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் இரட்­டிப்­பா­னது. அதன் மதிப்பு 4.7 பில்­லி­யன் டாலர் (S$6.4 பில்­லி­யன்). இது கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் 97 விழுக்­காடு அதி­கம். ஆசிய-பசி­பிக் மூல­தன நில­வர அறிக்கை இத­னைத் தெரி­வித்­தது. ரியல் கேப்­பிட்­டல் அன­லிட்­டிக்ஸ் (ஆர்­சிஏ) நிறு­வ­னம் நேற்று இந்த அறிக்­கையை வெளி­யிட்­டது. இவ்­வாண்­டின் ஜூன் மாதம் வரை­ சிங்­கப்­பூ­ருக்கு வந்த முத­லீ­டு­களில் பாதிக்கு மேற்­பட்­டவை எல்­லை கடந்த முத­லீட்­டாளர்­க­ளி­டம் இருந்து வந்­தவை என அது குறிப்­பிட்­டது. மேலும் இவ்­வாண்­டின்

முத­லீட்டு நட­வ­டிக்­கை­கள் சிங்­கப்­பூ­ரின் மூன்­றா­வது பெரிய அளவு. அதே நேரம் வெளி­நாட்­டி­ன­ரின் சொத்துச் சந்தை முத­லீட்­டுக்கு ஏற்ற நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் முதன்­மு­றை­யாக முத­லா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது என

ஆர்­சிஏ கூறி­யுள்­ளது.

மதுபான விற்பனை கட்டுப்பாடுகளைத் தளர்த்த கடைக்காரர்கள் கோரிக்கை

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களைக் கவர இசையை ஒலிபரப்பவும் மதுபானம் விற்க இரவு 10.30 மணி வரை அனுமதி என்பதை நள்ளிரவு வரை நீடிக்கவும் உணவு, பானக் கடைக்காரர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். உணவகங்களில் உணவு உட்கொள்ள போடப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்றபோதும்

வேலை ஆதரவு மற்றும் வாடகை நிவாரணத்திற் கான உதவித் தொகைகளை முன்கூட்டியே வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிங்கப்பூர் இரவுநேர வர்த்தக சங்கமும் 500 கடைகளைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் காக்டேல் பார் சங்கமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) கூட்டாக அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்தக் கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அந்தச் சங்கங்கள் பொருளி யல் மறுதிறப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

மேலும் சில சினோவேக் தடுப்பூசிகள் விரைவில் வரும்

அடுத்தகட்ட சினோவேக் கொவிட்-19 தடுப்பூசிகள் 4-6 வாரங்களுக்குள் சிங்கப்பூர் வந்தடையும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தற்போது அரசாங்க இருப்பில்

200,000 தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்தை பெறுவதற்குத் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு உதவிவருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க இருப்பில் உள்ள தடுப்பு மருந்துகளில் மொத்தம் 170,000 தடுப்பு மருந்துகள் 31 தனியார் சுகாதார நிறுவனங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 85,000 பேர் இலவசமாகத் தடுப்பூசி பெறுவர். எஞ்சிய 30,000 தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட சிங்கப்பூரர்களுக்காகவும் நிரந்தர வாசிகளுக்காகவும் நீண்டகால அனுமதியுடையவர்களுக்காக வும் மற்றவர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மற்றவர்கள் பிரிவில் அடங்குவோரைப் பற்றிய விவரங்களை அமைச்சு தெரிவிக்கவில்லை.