இரண்டாம் காலாண்டில் அசையா சொத்து முதலீடுகளின் மதிப்பு $3.6 பில்லியனாக உயர்வு

இரண்டாம் காலாண்டில் அசையா சொத்து முதலீடுகளின் மதிப்பு $3.6 பில்லியனாக உயர்வு

1 mins read
4d5e07a4-a571-47bc-98a3-a4acef6efe8b
-

கட்­ட­டம், நிலம், இயந்­தி­ரங்­கள், உப­க­ர­ணங்­கள் மற்­றும் திட்­டம் தொடர்­பான உள்­கட்­ட­மைப்பு ஆகிய­வற்றை உள்­ள­டக்­கிய அசையா சொத்­து­களில் செய்­யப்­பட்ட முத­லீ­டு­க­ளின் மதிப்பு இரண்­டாம் காலாண்­டில் $3.6 பில்­லி­ய­னாக உயர்ந்­தி­ருந்­தது.

முதல் காலாண்டு முத­லீ­டு­களின் மதிப்பு $2.8 பில்­லி­ய­னாக இருக்க அது ஏப்­ரல் மாதத்­திற்­கும் ஜூன் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 28.6 விழுக்­காடு அதி­கரித்­தி­ருப்­ப­தாக நேற்று வெளி­யிடப்­பட்ட வர்த்­தக, தொழில் அமைச்­சின் பொரு­ளி­யல் ஆய்வு அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

'எஃப்ஏஐ' எனப்­படும் அசையா சொத்து முத­லீ­டு­களில், $2.5 பில்லி­யன் மதிப்­பு­டன் உற்­பத்­தித் துறையே பெரும்­பான்மை முத­லீட்­டைப் பெற்­றி­ருந்­தது.

உற்­பத்­தித் துறைக்­குள் அடங்­கும் மின்­ன­ணு­வி­யல் பிரிவு மட்­டும் $1.3 பில்­லி­யன் முத­லீட்­டை­யும் உயிர்­ம­ருத்­துவ உற்­பத்­திப் பிரிவு $603 மில்­லி­யன் முத­லீட்­டை­யும் பெற்­றி­ருந்­தன.

சேவைத் துறை­யில் $594 மில்லி­யன் முத­லீட்­டைப் பெற்­றி­ருந்­தது ஆராய்ச்சி, மேம்­பாட்­டுப் பிரிவு.

இரண்­டாம் காலாண்­டுப் பகுதி­யில் ஆக அதி­க­மான முத­லீட்டு மதிப்­பு­டன் மொத்த 'எஃப்ஏஐ'யில் 59% அதா­வது $2.1 பில்­லி­யன் பங்­க­ளித்­தோர் அமெ­ரிக்க முத­லீட்­டா­ளர்­களே என்று கூறப்­பட்­டது.

இருப்­பி­னும் மொத்த வர்த்­த­கச் செல­வி­னத்­தின் முத­லீட்டு மதிப்பு, முதல் காலாண்­டின் $1.9 பில்­லியனிலி­ருந்து இரண்­டாம் காலாண்­டில் $1.4 பில்­லி­ய­னா­கச் சரிந்­தது.