இரட்டிப்பு லாபம் ஈட்டிய 'புரோப்நெக்ஸ்' நிறுவனம்

இரட்டிப்பு லாபம் ஈட்டிய 'புரோப்நெக்ஸ்' நிறுவனம்

1 mins read
18ae4cb2-6c9a-4846-a860-02a371dd6c68
-

சொத்­துச் சந்தை நிறு­வ­ன­மான 'புரோப்­நெக்ஸ்', 2021ன் இரண்­டாம் காலாண்­டில் $16.5 மில்­லி­யன் லாபம் ஈட்­டி­யுள்­ளது. கடந்த ஆண்டு இதே கால­கட்­ட­மான மே முதல் ஜூன் வரை பதி­வான அதன் $7.3 மில்­லி­யன் லாபத்­தைக் காட்­டி­லும் இவ்­வாண்டு இரு மடங்­குக்கு மேல் இந்த நிறு­வ­னம் ஈட்டி­உள்­ளது. இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் நிறு­வ­னம் $31.3 மில்­லி­யன் லாபம் ஈட்­டி­யது. கடந்த ஆண்­டின் முதல் பாதி லாபம் $14.8 மி.

இந்­நி­லை­யில், நிறு­வ­னம் அதன் முத­லீட்டு பங்­கு­க­ளுக்­குத் தலா 5.5 காசை இடைக்­கால ஈவுத்­தொ­கை­யாக அறி­வித்­துள்­ளது. நிறு­வனம் தொடங்­கி­ய­து­மு­தல், இதுவே ஆக அதி­கம் என்­றும் இந்த ஈவுத்­தொகை அடுத்த மாதம் 3ஆம் தேதி­யன்று வழங்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டது. கொவிட்-19 சூழ­லும் பொரு­ளி­ய­லும் மேம்­பட்டு, இரண்­டாம் காலாண்­டில் மேலும் அதி­க­மான பரி­வர்த்­த­னை­கள் இருந்­த­தால் வலு­வான வளர்ச்சி கண்­ட­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.