பெண் குளிக்கும்போது படமெடுத்த ஆடவர்

பெண் குளிக்கும்போது படமெடுத்த ஆடவர்

1 mins read
46dbebef-9859-4f90-88fd-e754bcc0a29f
-

தெம்­ப­னீ­ஸில் தனது உறவினர்களின் வீட்­டில் தங்­கி­யி­ருந்­த­போது 18 வயது பெண் குளிப்­ப­தைக் காணொ­ளி­யில் பதி­வு­செய்­ததை ஆட­வர் ஒரு­வர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். அவ­ருக்கு வயது 32. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், குற்றவாளியின் சகோதரரின் மனைவி. தடை உத்­த­ரவு இருப்­ப­தால் குற்­ற­வா­ளி­யின் பெயர் வெளியிடப்­ப­ட­வில்லை.

பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

சம்பவம் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்த மாதம் 13ஆம் தேதி­யன்று குற்­ற­வா­ளிக்­குத் தீர்ப்­ப­ளிக்­கப்­படும். பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­திய குற்­றம் நிரூ­பிக்கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.