தேசிய சேவை ஆற்றாதவருக்கு சிறை

தேசிய சேவை ஆற்றாதவருக்கு சிறை

1 mins read
6a134f42-2245-4458-8ae2-8b2c9c47e750
-

தேசிய சேவை ஆற்றாத 24 வயது ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் குற்றத்திற்காக சிறைத் தண்டனையைப் பெறும் 18வது நபர்.

தகுந்த அனுமதி இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி ஐந்தாண்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்த குற்றத்திற்காக முகமது சரியான் முகமது யாசிடுக்கு 10 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதே­போல் அனுமதியின்றி ஓராண்­டுக்கு மேல் வெளி­நாட்­டில் இருந்­த­தா­கச் சுமத்தப்­பட்­டி­ருந்த மற்றொரு குற்­றச்­சாட்­டும் தீர்ப்பளிக்­கும்­போது கருத்­தில்­கொள்ளப்­பட்­டது.