ஆகச் சிறந்த நிறுவனங்களைத் தெரிவுசெய்யும் கருத்தாய்வு

ஆகச் சிறந்த நிறுவனங்களைத் தெரிவுசெய்யும் கருத்தாய்வு

1 mins read
61bec18b-e670-4d76-aafe-9e06acdc694c
-

சிங்கப்பூரில் உள்ள ஆகச் சிறந்த நிறுவனங்களின் தரத்தை நிர்ணயித்துப் பட்டியலிடும் கருத்தாய்வு நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கருத்தாய்வு நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று நிறைவுறும்.

அனைத்து துறை­க­ளி­லி­ருந்­தும் மொத்­தம் 200 ஆகச் சிறந்த நிறுவனங்­கள் கருத்­தாய்­வில் இடம்­பெறு­கின்­றன. இந்த நிறு­வ­னங்­கள் குறைந்­தது 200 ஊழி­யர்­களை வேலைக்கு வைத்­தி­ருப்­பவை.

தங்கள் நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நண்பர்களையோ உறவினர்களையோ ஊழியர்கள் ஊக்குவிப்பார்களா என்ற அம்சத்தை முக்கியமாகக் கொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்படும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் முடிவுகள் வெளியிடப்படும்.

ஜெர்­ம­னி­யின் ஸ்டட்­டிஸ்டா நிறு­வ­ன­மும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸும் இணைந்து கருத்தாய்வை நடத்­து­கின்­றன. சென்ற ஆண்­டுக்­கான சிறந்த நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில் கூகல் முத­லி­டத்­தைப் பிடித்­தது. ஆப்­பிள் நிறு­வ­னம் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட், செப்டம்­பர் மாதங்­களில் இணை­யம்­வழி நடத்­தப்­பட்ட ஆய்­வில் 9,000க்கும் அதி­க­மா­னோர் பங்கேற்­ற­னர். தற்­போது உல­கைப் பெரி­தும் பாதிக்­கும் கொவிட்-19 பிரச்­சினை போன்ற நெருக்­க­டி­யான சூழல்­களில் ஊழி­யர்­க­ளி­டையே உள்ள ஒற்­றுமை, வேலை நிலைத்­தன்மை, நிர்­வா­கம் ஊழி­யர்­க­ளி­டம் காட்­டும் விசு­வா­சம் போன்ற அம்­சங்­க­ளுக்கு மேலும் முக்­கி­யத்­து­வம் கொடுக்கப்­ப­ட­வேண்­டும் என்று ஸ்டட்­டிஸ்டா கூறி­யது.