அங் மோ கியோவில் 11 பூனைகளை வெட்டிக் காயப்படுத்தியவருக்குச் 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளியான 37 வயது லியாவ் வெய் லியாங்கிற்கு விதிக்கப்பட்ட
தண்டனை போதாது என்றும், இதுபோன்ற குற்றம் நேராமல் தவிர்க்க இன்னும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவேண்டும் என்றும் விலங்குப் பிரியர்கள் கூறுகின்றனர்.
விலங்குகளைத் துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 18 மாதச் சிறைத் தண்டனையும் 15,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

