எட்டு வயது மகள் கொலை - தாயார் மீது குற்றச்சாட்டு

எட்டு வயது மகள் கொலை - தாயார் மீது குற்றச்சாட்டு

1 mins read
f1b59328-a7f7-4894-8d44-445300e6c765
-

தமது எட்டு வயது மகளைக் கொலை செய்ததாக மாது ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை கேலாங் லோரோங் 31ல் காலை சுமார் 11.38 மணிக்கு அந்தச் சிறுமி கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றிய தகவல் செவ்வாய்க்கிழமை சுமார் 11.40 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்தச் சிறுமை கீழே அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர்.

சுயநினைவின்றி இருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர் மாண்டதாக 12.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

சிறுமியின் தாயாரைப் போலிசார் கைது செய்தனர்.

கொலைக்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்கப்படும்.