தூற்றுவோரைப் புறக்கணித்து இணையத்திலிருந்து வரும் எதிர்மறைப் போக்குகளை தன்முனைப்பாக மாற்றும்படி அதிபர் ஹலிமா யாக்கோப், ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் விளையாட்டு வீரர்களிடம் கேட்டுக்கொண்டார்.
வியாழக்கிழமை இவர், தோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 23 சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களில் 15 பேரை இணையம் வழியாக சந்தித்தார்.
போட்டி முடிவுகள் என்னவாக இருந்தாலும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களை நினைத்துப் பெருமைப்படலாம் என அதிபர் கூறினார். "நாங்களும் உங்கள் மீது பெருமை கொண்டுள்ளோம். விளையாட்டுகளில் உணர்வுகள் அலைமோதும், விளையாட்டாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி. விளையாட்டுக்குரிய ரஞ்சகமான கூறு இதுதான்,"
" இந்தக் காலக்கட்டத்தில், ஒவ்வொரு சமூக ஊடக பதிவும் செய்தியும் உங்களுக்காக ஆயிரக்கணக்கானோரின் ஆதரவுக் குரலையும் உங்களது உழைப்புக்கான பாராட்டையும் திரட்டியுள்ளன. பலர் உங்களால் உற்சாகம் அடைந்துள்ளனர்,"என்று கூறினார் அதிபர்.
புண்படும் சொற்கலை விடுத்து தங்களது ஆற்றலை அடுத்த இலக்குக்கு பயன்படுத்தும்படி திருமதி ஹலிமா கூறினார்.

