கடற்படுகையில் மோதிய கப்பல் - கசிந்தது எண்ணெய்

கடற்படுகையில் மோதிய கப்பல் - கசிந்தது எண்ணெய்

1 mins read
833670a2-4b0e-42be-a7f7-05ea4f6bf345
-

பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல், ஜப்பானின் வடக்குப் பகுதியில் திடீரென கடல் தரையில்மீது மோதியது. அந்தச் சம்பவத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இருந்தபோதும், கப்பலின் 21 பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய கடலோர காவற்படை தெரிவித்தது.

'க்ரிம்சன் போலாரிஸ்' என்ற அந்த 39,910 டன் கப்பல், மரச்சில்லுகளைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அச்சினோவே துறைமுகத்திற்கு அருகே காலை புதன்கிழமையின்போது (ஆகஸ்ட் 11ஆம் தேதி) கப்பலை மோதியது.

வேறு கப்பல்களின் உதவியின்றி இறுதியில் அந்தக் கப்பல் சுயமாக வெளிவந்தது. மோசமான வானிலை காரணமாக அது, துறைமுகத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி நங்கூரமிட்டது.