புதிதாக 59 பேர் பாதிப்பு

புதிதாக 59 பேர் பாதிப்பு

1 mins read
13345928-6a12-4431-a6ba-07e5154b9475
-

சிங்கப்பூரில் புதிதாக 59 பேருக்கு சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிய சம்பவங்களில் 26 பேர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை. மற்ற 14 பேர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை.

எஞ்சிய 19 சம்பவங்கள் தொடர்புகள் இல்லாதவை. இது, புதன்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட 17 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.

இந்த 59 பேரில் ஐவர், 70 வயதுக்கும் அதிகமானோர். முழுமையாக தடுப்பூசி போடாத இவர்கள், கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தை எதிர்நோக்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டில் கிருமித்தொற்றுக்குள்ளாகி எவரும் வந்ததாக இன்று தகவல் இல்லை. புதிதாக பாதிக்கப்பட்டோருடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றின் எண்ணிக்கை 66, 102க்கு உயர்ந்தது.