சிங்கப்பூர் சுதந்திரமடைந்த காலகட்டத்தில் நடந்த நகர்ப்புறமயமாக்கம் குறித்த கதைகளை வருங்காலச் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நவீனக் கட்டடங்களைப் பாதுகாக்க புதிய மரபுடைமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டங்களில் பல உள்ளூர்க் கட்டடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவை.
சிங்கப்பூரில் இதுவரை 7,200 கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் பல நாடு சுதந்திரமடைந்தவதற்கு முன்பு காலனித்துல காலத்தில் கட்டப்பட்டவை. அவை சுதந்திர சிங்கப்பூரைப் பிரதிபலிக்காது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த பின் கட்டப்பட்ட நவீனக் கட்டடங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட புதிய குழு 'டோகோமோமோ சிங்கப்பூர்' என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் குழு, நவீனக் கட்டடங்கள், நவீன சுற்றுச்சூழல் போன்றவற்றின் விவரங்களை ஆவணப்படுத்துவதோடு அவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும். எழுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்தக் குழு செயல்பட்டு வருகிறது.
'டோகோமோமோ சிங்கப்பூர்' என்று அழைக்கப்படும் புதிய குழு, ஆவணங்கள் மற்றும் கட்டடங்கள், தளங்கள் மற்றும் நவீன இயக்கத்தின் சுற்றுப்புறங்கள் (டோகோமோமோ இன்டர்நேஷனல்) ஆகியவற்றின் உள்ளூர் அத்தியாயமாகும், இது 1988ல் நிறுவப்பட்டது மற்றும் தற்போது லிஸ்பனில் அமைந்துள்ளது. இது உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. 'டோகோமோமோ இன்டர்நேஷனல்' என்னும் இந்தக் குழு போர்ச்சுக்கீசிய நாட்டின் லிஸ்பன் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிவருகிறது.
சிங்கப்பூருக்கான 'டோகோமோமோ சிங்கப்பூர்' மரபுடைமைக் குழுவுக்கும் தலைமை ஆய்வுப் பணிக்கும் டாக்டர் சாங் ஜியாட் ஹுவி தலைமை வகிக்கிறார்.
"இன்றைய சிங்கப்பூர் முற்றிலும் நவீனமயமாகியுள்ளது. இந்த நவீனமயமாக்கம் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது குடியிருப்புப்பேட்டைகளிலும் அரங்கேறியுள்ளது.
"எனவே, சிங்கப்பூரின் நவீன கட்டடக் கலை, வடிவமைப்பு குறித்த கதைகளைச் சொல்லவேண்டும் என்றால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறக் கூடாது," என்கிறார் டாக்டர் சாங்.

