சட்டவிரோதமாக தங்கியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்த சிங்கப்பூரருக்குச் சிறை

சட்டவிரோதமாக தங்கியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்த சிங்கப்பூரருக்குச் சிறை

2 mins read
315eaa79-672d-4478-a466-9e5a67b8d806
-

ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்து அதை தகாத நட­வ­டிக்­கை­களில் பயன்படுத்தி வந்த சீன நாட்டைச் சேர்ந்த இருவருக்கு வாட­கைக்கு விட்ட சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வ­ருக்­குக் குடி­நு­ழை­வுக் குற்­றத்­தின் அடிப்­ப­டை­யில் 7 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

முதல் பெண்­ம­ணிக்கு அடைக்­க­லம் கொடுத்­த குற்­றத்­திற்­கா­கவும் இரண்­டாம் பெண்­ம­ணிக்­கும் அடைக்­க­லம் கொடுத்ததைக் கருத்­தில் கொண்­டும் 26 வயது ஷூ யீஷு­யெ­னுக்கு அத்­தண்­டனை வழங்­கப்­பட்­டது. 2 பெண்­களும் காலங்­க­டந்து சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருந்­த­வர்­கள்.

தெம்­பனிசில் உள்ள அந்த வீட்டை நவம்­பர் 4ஆம் தேதி 2019ல் காவல் துறை­யி­ன­ரு­டன் சேர்ந்து சோதனை செய்த­தா­கக் குடி­நுழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று கூறி­யது.

விசா­ரித்­த­போது ஷூ, அக்­டோ­பர் 2019ல் வாட­கை ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தது தெரியவந்­தது.

அதன் பின் அதே­யாண்டு அக்­டோ­பர் 27ஆம் தேதி, ஷூ அந்த வீட்டை ஹுவாங் ஹவோ­யிங்­கி­ட­மும், ஹ லெய்­யி­ட­மும் வாட­கைக்கு விட்­டார். அவர் தொடர்ந்து உட்­லன்­ட்ல்ஸி இருந்த தம் வீட்­டில் தங்­கி­ய­வாறு தின­மும் ஹுவோ­யிங்­கி­ட­மி­ருந்து $110ம் ஹுவி­ட­மி­ருந்து $120ம் வாட­கை­யாய் விதித்­தார்.

வீட்டை வாட­கைக்கு விடு­வ­தற்கு முன் குடி­நு­ழைவு அனு­ம­தி­யைச் சரி­பார்க்­கா­த­தால் ஷூ அந்­தப் பெண்­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுத்து குடி­நு­ழை­வுக் குற்­றத்­துக்கு ஆளா­கி­யுள்­ளார் என ஐசிஏ கூறி­யது.

விசா அனுமதி முடிந்து தங்­கி­ய­துக்கு இரு பெண்­க­ளுக்­கும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

ஐசிஏ வெளி­யிட்ட அறிக்­கை­யில் வீட்­டு­ரி­மை­யா­ளர்­கள் 3 அத்­யா­வ­சிய சோத­னை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று அது குறிப்­பிட்­டது.

வாட­கைதாரர்களின் அசல் குடி­நு­ழைவு அல்­லது வேலை அனு­ம­தி­யைச் சரி­பார்க்க வேண்­டும் அசல் கட­வுச்­சீட்­டில் உள்ள அவர்­க­ளு­டைய விவ­ரங்­க­ளைக் குடி­நு­ழைவு அல்­லது வேலை அனுமதி­யு­டன் ஒப்­பிட்­டுச் சரி­பார்க்க வேண்­டும்.

குடி­நு­ழைவு அல்­லது வேலை அனு­ம­தியை வழங்­கிய ஆணை­யத்­து­டன் வழங்­கப்­பட்ட அனு­மதி காலத்­தைச் சரி­பார்க்க வேண்­டும்.

உதா­ர­ணத்­துக்கு, வேலை அனு­ம­தி­களை மனிதவள அமைச்­சு­டன் சரி­பார்க்க வேண்­டும், மாணவர் அனுமதிச்சீட்டு போன்ற குடி­நு­ழைவு அனு­ம­தி­களை ஐ.சி.ஏயு­டன் சரி­பார்க்க வேண்­டும்.

பொறுப்­பில்­லா­மல் இம்­மூன்­றில் ஒன்றை மட்­டும் சரி­பார்­ப்போ­ருக்­கும், தெரிந்தே காலங்­க­டந்­தி­ருப்­போர் அல்­லது கள்­ளக்­கு­டி­யே­றி­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுப்­போ­ருக்­கும் குறைந்­தது ஆறு மாதத்­தி­லி­ருந்து இரண்டு ஆண்டு கால சிறை தண்­ட­னை­யும் $6,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

அலட்­சி­ய­மாக இம்­மூன்­றில் இரண்டை மட்­டும் சரி­பார்­ப்போ­ருக்­கும், தெரிந்தே விசா அனுமதி முடிந்த அல்­லது கள்­ளக்­கு­டி­யே­றி­களுக்கு அடைக்­க­லம் கொடுப்­போ­ருக்­கும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா $6,000 வரை அப­ரா­தம் 12 மாதம் வரை சிறை தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.