பாலர் பள்ளி தீ: அக்கம் பக்கத்தில் வசிப்போர் வெளியேற்றப்பட்டனர்

பாலர் பள்ளி தீ: அக்கம் பக்கத்தில் வசிப்போர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
4df70303-bfda-4ca6-b650-13d7db684f1e
-

243 பாசிர் பாஞ்­சாங்­கில் அமைந்­துள்ள மேப்­பல் பேர் பாலர் பள்­ளிக் கட்­ட­டம் செவ்­வாய் இரவு தீப்பற்­றி­யது.

தீய­ணைப்­பா­ளர்­கள் வலுக்­கட்­டா­ய­மா­கக் கட்­ட­டத்­தின் உள்ளே செல்ல நேரிட்­ட­போது அக்கம் பக்­கத்­தில் வசிப்­போர் அவர்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். பெரும்­பா­லும் கட்­ட­டத்­தின் முன் பகு­தி­யில் மட்­டுமே தீப்பற்­றி­ய­தா­க­வும் பள்­ளி­யின் உடை­மை­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறி­யது. மேலும் அவ்­வே­ளை­யில் யாரும் கட்­ட­டத்­தில் இல்லை என்­றும் அது கூறி­யது. தீ மூண்ட கார­ணம் குறித்து விசா­ரணை நடந்து வரு­கிறது.

வெஸ்ட் கோஸ்ட் அடித்­தள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரேச்­சல் ஓங் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக மக்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் அவர்­க­ளுள் பெரும்­பா­லோர் இரவு 8.30 மணிக்­குள் வீடு திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதிவு செய்­தி­ருந்­தார்.

மேலும் கிராப் உணவு விநி­யோ­கிப்பாளர் ஒரு­வ­ரும் நீல நிற ஆடை அணிந்­தி­ருந்த ஆட­வர் ஒரு­வ­ரும் கட்­ட­டத்­தில் யாரும் இல்­லாததை உறு­தி செய்ய கட்­ட­ட­த்தி­னுள் நுழைந்­த­தைத் தான் அறிந்­து­கொண்­ட­தா­க­வும் அவர்­க­ளது தைரி­யத்­தைத் தான் பாராட்டு­வ­தா­க­வும் விரை­வில் அவர்­களை முறை­யா­கச் சந்­தித்து நன்றி கூற விரும்­பு­வ­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.