அதிபர் கல்விமான் உதவியுடன் கடற்படையில் வாழ்க்கைத்தொழில்

அதிபர் கல்விமான் உதவியுடன் கடற்படையில் வாழ்க்கைத்தொழில்

1 mins read
6d48b5f9-343b-42b5-aa39-5bb620ab9b24
லெஃப்டி­னெண்ட் ஆங் சைன் யீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்த ஆண்­டின் அதி­பர் கல்­வி­மான் விருது இரண்டு பேருக்கு கிடைத்து இருக்­கிறது. சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யைச் சேர்ந்த லெஃப்டி­னெண்ட் ஆங் சைன் யீ அவர்­களில் ஒரு­வர்.

ஆர்­வம் மிகு­தி­யால் இந்த 20 வயது பெண்­மணி தனது 17வது வய­தில் தற்­காப்பு அமைச்சு நடத்­திய முகாம் ஒன்­றில் சேர்ந்­தார். அங்கு அவ­ருக்கு கிடைத்த அனு­பவம், கடற்­ப­டை­யில் வாழ்க்­கைத்­தொ­ழிலை மேற்­கொள்ள வேண்­டும் என்ற விருப்­பத்தை அவ­ரி­டம் ஏற்­படுத்­தி­யது.

ஹுவா சோங் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வி­யான அவர், அமெ­ரிக்­கா­வில் உள்ள பிரௌன் பல்­கலைக்­க­ழ­கத்­தில் பொரு­ளி­யல், புள்­ளி ­வி­வ­ர­வி­யல் படிப்­பார்.

அதி­பர் கல்­வி­மான் விரு­தைப் பெற்­றி­ருக்­கும் மற்­றொ­ரு­வர் ராஃபிள்ஸ் பள்­ளி­யைச் சேர்ந்த முன்­னாள் மாணவி வோங் சியா யிங், 19. இவர் கலி­ஃபோர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆங்­கி­லம் பயில்­வார். இந்த விருது வழங்­கும் நிகழ்ச்சி நேற்று நடந்­தது. அதில் கலந்­து­கொண்ட அதி­பர் ஹலிமா யாக்­கோப், எதிர்­கால தலை­வர்­கள் என்ற முறை­யில் இந்­தக் கல்­வி­மான்­கள் தொடர்ந்து உறு­தி­யோ­டும் அர்ப்­ப­ணிப்பு உணர்­வோ­டும் சேவை­யாற்ற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

''மீட்­சித் திற­னு­டன் சூழ்­நி­லைக்­கேற்ப மாறிக்­கொள்­ளும் ஆற்­ற­லு­டன் திக­ழுங்­கள். இப்­படி திகழ்­வ­தன் மூலம் நீங்­கள் சிங்­கப்­பூ­ரர்­களின் நலன்­களை தலை­சி­றந்த முறை­யில் நிறை­வேற்­றும் கொள்­கை­களை உரு­வாக்க முடி­யும்,'' என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

அதி­பர் கல்­வி­மான் விருது என்­பது அர­சாங்க தேர்­வா­ணை­யம் வழங்­கும் இள­நிலை பட்­டப் படிப்பு மாண­வர்­க­ளுக்­கான மிக­வும் சிறப்பு­மிக்க விரு­தா­கும். அது 1966 முதல் வழங்­கப்­பட்டு வரு­கிறது.