சிங்கப்பூரின் ஆயுள் காப்புறுதித் துறை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் புதிய விற்பனைகளின் மூலம் $2.68 பில்லியன் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 61 விழுக்காடு அதிகம். கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததால் காப்புறுதித் திட்டங்களுக்கான விற்பனை கடந்த ஆண்டு சரிவு கண்டது.
ஒருமுறை மட்டுமே சந்தா செலுத்த வேண்டிய திட்டங்களுக்கான விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 106 விழுக்காடு ஏற்றம் கண்டது.
இதன் விளைவாக $1.28 பில்லியன் வருமானம் ஈட்டியதாக சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் நேற்று தெரிவித்தது.
ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் சந்தா திட்டங்களுக்கான விற்பனையும் 35 விழுக்காடு அதி
கரித்துள்ளது. இதன் மூலம் $1.4 பில்லியன் வருமானம் ஈட்டி இருப்பதாக சங்கம் கூறியது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 32,952 புதிய காப்
புறுதித் திட்டங்கள் இணையம் மூலம் வாங்கப்பட்டன. ஆனால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 203,351ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி கூடுதல் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசி
களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டுத் காப்புறுதித் திட்டங்களுடன் ரைடர் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு காப்புறுதித் திட்டங்களும் ரைடர் திட்டமும் உள்ளன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆயுள் காப்
புறுதித் திட்டங்களுக்கான விற்பனை அதிகரித்திருப்பது சிங்கப்பூரின் பொருளியல் நிலையாக இருப்பதைக் காட்டுவதாக சங்கத்தின் தலைவர் திரு கோர் ஹொக் செங் குறிப்பிட்டார்.
"கொவிட்-19 சூழலில் மேலும் பலர் தங்கள் நீண்டகால நிதி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் தேவை
களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதையே ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கான விற்பனை அதிகரிப்பு உணர்த்துகிறது," என்றார் திரு கோர்.
சிங்கப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டு 5.4 விழுக்காடு சுருங்கியது.
இவ்வாண்டு அது ஆறு விழுக்காட்டிலிருந்து ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

