கௌரவிக்கப்பட்ட ஏறத்தாழ 2,000 உபசரிப்புத் துறை ஊழியர்கள்

கௌரவிக்கப்பட்ட ஏறத்தாழ 2,000 உபசரிப்புத் துறை ஊழியர்கள்

2 mins read
959f7b34-ebc3-43e0-9442-fa70e9996e64
-

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது உ­ப­ச­ரிப்­புத் துறை­யைச் சேர்ந்த ஏறக்­காழ 2,000 ஊழி­யர்கள் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளா­கச் செயல்­பட்­ட­னர்.

இந்த ஊழி­யர்­கள் நேற்று இணை­யம் வழி நடத்­தப்­பட்ட விழா­வில் கௌர­விக்­கப்­பட்­டனர். இந்த மெய்­நி­கர் விழா­வுக்கு உணவு, பானத் துறை ஊழி­யர்­க­ளுக்­கான சங்­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இதில் 34 ஹோட்­டல்­கள், 15 அர­சாங்க அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 280க்கும் மேற்­பட்ட பிர­தி­நி­தி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

கௌர­விக்­கப்­பட்­ட­வர்­களில் திரு அக்­பர் கான் உமர் கானும் ஒரு­வர். கொவிட்-19 கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­ய­தற்கு முன்பு கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­க­ளாக அவர் ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லான கிராண்ட் ஹயட்­டில் பணி­பு­ரிந்­தார்.

கடந்­த ஆண்­டு கிரு­மிப்

பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது ஹோட்­ட­லில் தங்­கும் விருந்­தி­னர்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­தது.

எனவே, தற்­கா­லி­க­மாக வேறு ஒரு நிறு­வ­னத்தில் சேர்ந்து முன்

­க­ளப் பணி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் தெரிவை கிராண்ட் ஹயட் ஹோட்­டல் தனது ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கி­யது.

பாது­காப்பு இடை­வெளி தூதர்­கள், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காணும் ஊழி­யர்­கள், பொது­மக்­க­ளின் உடல் வெப்­ப­நி­லை­யைப் பரி­சோ­தனை செய்­யும் ஊழி­யர்­கள், பேரங்­காடி விற்­பனை உத­வி­யா­ளர் போன்ற தெரி­வு­கள் வழங்­கப்­பட்­டன.

முன்­க­ளப் பணி­யா­ளர் வேலை­யில் ஈடு­பட விரும்­பாத சில ஊழி­யர்­களை விடுப்­பில் செல்­லு­மாறு ஹோட்­டல் கேட்­டுக்­கொண்­டது. சிலர் ஹோட்­ட­லின் மற்ற பிரி­வு­

க­ளுக்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

48 வயது திரு அக்­பர் ஃபேர் பி­ரைஸ் பேரங்­கா­டி­யில் விற்­பனை உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

அது­மட்­டு­மல்­லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்­தி­லி­ருந்து நவம்­பர் மாதம் வரை சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழகத்தின் பாது­காப்பு நிர்­வாக ஆய்­வா­ள­ரா­க­வும் அவர் நிய­மிக்­கப்­பட்­டார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள கடை­க­ளைக் கண்­கா­ணிக்­கும் பொறுப்பு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

தற்­போது அவர் மீண்­டும் கிராண்ட் ஹயட் ஹோட்­ட­லில் பணி­பு­ரி­கி­றார்.

ஊழி­யர்­க­ளைக் கௌர­வப்­ப­டுத்­தும் மெய்­நி­கர் விழா­வில் உணவு, பானத்­துறை ஊழி­யர்­கள் சங்­கத்­தின் ஆலோ­ச­க­ரும் ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத் தொகுதி நாடாளு­ மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு கிறிஸ்­ட­ஃபர் டி சூசா கலந்­து­கொண்­டார்.

சில துறை­களில் ஊழி­யர்

பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தால் மற்ற துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­களை அங்கு வேலை­யில் அமர்த்­தி­ய­தாக அவர் தெரி­வித்­தார்.

"நிலை­மையை ஊழி­யர்­கள் நன்கு புரிந்­து­கொண்­ட­னர். அவர்­கள் சுய­ந­ல­மின்றி நடந்­து­கொண்­ட­னர். மற்ற நிறு­வ­னங்­களில் தற்­காலி ­க­மா­கப் பணி­யாற்ற அவர்­கள் இணக்­கம் தெரி­வித்­த­னர். முன்­

க­ளப் பணி­யா­ளர்­க­ளாக அவர்­கள் அய­ராது உழைத்­த­னர். சமூ­கத்­தி­ன­ரின் பாது­காப்­புக்கு அவர்­கள் பங்­

க­ளித்­த­னர்," என்­றார் திரு கிறிஸ்­ட­ஃபர்.