கடையின் பிரதான நுழைவாயிலை மூடி இரவு 10.30 மணிக்குப் பிறகு மதுபானம் விற்றதாகக் கூறப்படும் உணவகத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு மதுபானம் விற்கப்படுவது அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க உணவகம் அவ்வாறு செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையம் கூறியது.
மதுபான விற்பனை விதி
முறையை மீறியதற்காக 28 பீட்டி சாலையில் உள்ள 'டார்ட்ஸ் படி' எனும் உணவகம் மீது குற்றச்சாட்டு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று அந்த உணவகத்தின் பின் வாசல் வழியாக வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக இருப்பதை பாதுகாப்பு இடைவெளி அதிகாரிகள் கண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உணவகத்தின் உரிமையாளருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை
அபராதமும் விதிக்கப்படலாம்.